தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Alya Manasa: பண கஷ்டம்.. அப்பாவுக்காக வாய்ப்பை ஏற்ற ஆல்யா மானசா.. கணவரால் கிடைத்த சந்தோஷம்

Alya Manasa: பண கஷ்டம்.. அப்பாவுக்காக வாய்ப்பை ஏற்ற ஆல்யா மானசா.. கணவரால் கிடைத்த சந்தோஷம்

Aarthi Balaji HT Tamil
May 27, 2024 05:30 AM IST

Alya Manasa: முடியை சரி செய்து கொள்வேன். ஆடிஷனுக்கு செல்வேன். பல நேரங்களில் அங்கு சென்ற பின்னர், அவர்கள் சொல்லக்கூடிய கேரக்டர் எனக்கு செட் ஆகாதது போல இருக்கும். அப்போது நான் அதை வேண்டாம் என்று மறுத்து வந்து விடுவேன்.

அப்பாவுக்காக வாய்ப்பை ஏற்ற ஆல்யா மானசா.. கணவரால் கிடைத்த சந்தோஷம்
அப்பாவுக்காக வாய்ப்பை ஏற்ற ஆல்யா மானசா.. கணவரால் கிடைத்த சந்தோஷம்

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தை பிறந்ததால் சிறிய இடைவெளி எடுத்து விட்டு ஆல்யா மானசா தனது உடல் எடையை அசத்தலாகக் குறைத்து மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கினார். இதனையடுத்து இரண்டாவதாக அர்ஷ் என்ற ஆண் குழந்தைக்கு தாயானார். இவர் தற்போது இனியா சிரீயலில் நடித்து வருகிறார்.

சினிமா வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த இரண்டாம் ஆண்டிலேயே, படிப்பை அப்படியே நிறுத்திவிட்டு, சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியை செய்ய ஆரம்பித்து விட்டேன். 

சினிமா கனவு

அந்த சமயத்தில் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நான் முயற்சி செய்து கொண்டிருந்தேன். தினமும் காலையில் எழுந்திருப்பேன்; மேக்கப் செய்வேன். முடியை சரி செய்து கொள்வேன். ஆடிஷனுக்கு செல்வேன். பல நேரங்களில் அங்கு சென்ற பின்னர், அவர்கள் சொல்லக்கூடிய கேரக்டர் எனக்கு செட் ஆகாதது போல இருக்கும். அப்போது நான் அதை வேண்டாம் என்று மறுத்து வந்து விடுவேன்.

சில சமயங்களில் அவர்கள், அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமானவள் இல்லை என்று சொல்லி, அனுப்பி விடுவார்கள். இது கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து கொண்டிருந்தது.

ஆனால் நான் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி வந்தது.

இதனையடுத்து, ஜிம் ட்ரெய்னராக வேலை பார்ப்பது, குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது, பாடலில் பின்னணியில் நடனம் ஆடுவது உள்ளிட்ட பல வேலைகளை செய்தேன்.

அதிலிருந்து எனக்கு ஒரு கணிசமான தொகை செலவுக்கு கிடைத்தது. ஆனால் நீண்ட காலம் என்னால் அப்படியே சென்று கொண்டிருக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் எனக்கு சீரியலில் இருந்து வாய்ப்பு வந்தது.

மக்கள் எப்படி பார்ப்பார்கள்

ஆனால் அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு ஒரு சின்ன தயக்கம் இருந்தது. அது, சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த ஒரு பெண், சீரியலுக்கு வந்தால், அவளை மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்பது!

அந்த சமயத்தில், என்னுடைய அப்பா வேறு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆகையால், என்னுடைய அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நான் அந்த சீரியல் வாய்ப்பை எடுத்துக் கொண்டேன்.

சீரியலில் தினம் தினம்

ஆனால், இப்போது நான் ஒரு விஷயத்தை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறேன். அது என்னவென்றால், நான் சினிமாவில் நடித்திருந்தால் என்னை மக்கள், தீபாவளி, பொங்கல் அல்லது ஏதாவது ஒரு நாளில் தான் பார்க்க முடியும். ஆனால் இப்போது சீரியலில் தினம் தினம் என்னை பார்க்கிறார்கள்” என்று பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்