தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Als Jayanthi Kannappan Latest Interview Ilayaraja Daughter Bhavatharini Marriage Life And Divorce

Bhavatharini: பவதாரிணி - சபரி பிரிவு..நடந்தது என்ன? - ஜெயந்தி கண்ணப்பன்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 06, 2024 06:55 AM IST

அவர்கள் ஆத்மார்த்த தம்பதிகளாக இருந்தார்கள். இன்று சபரி பெரிய துக்கத்தில் இருக்கிறார். - ஜெயந்தி கண்ணப்பன்

இளையராஜா!
இளையராஜா!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “உண்மையில் பவதாரிணியும் சபரியும் பிரியவில்லை. பவதாரணி இலங்கைக்கு செல்லவில்லை என்றெல்லாம் செய்திகள் வருகின்றன அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அதற்கான விளக்கத்தை அவர்கள் கொடுக்க வேண்டும் என்ற தேவையும் ஏற்படவில்லை. 

அவர்கள் ஆத்மார்த்த தம்பதிகளாக இருந்தார்கள். இன்று சபரி பெரிய துக்கத்தில் இருக்கிறார். எல்லோரும் மாதிரியும் மிகவும் ஓப்பனாக அழுது எமோஷனை அவருக்கு காண்பிக்கத் தெரியாது. ஆனால் சபரி அப்படி இல்லை. 

ராஜீவ் காந்தி இறக்கும்பொழுது அவர்களது குடும்பத்தில் சோகமானது அப்பி கொண்டிருந்தது. ஆனால் யாரும் அழவில்லை. அப்படித்தான் சபரியும் பவதாரணியின் இறப்பு செய்தியை கேட்டு அப்படியே உறைந்து போய் நின்றார். 

அவருடைய எமோஷன் அப்படியானதாக தான் இருந்தது. பவதாரணியும் திருமணமான பின்னர் சபரியுடன் தான் இருந்தார். தம்பதிகள் தேவையில்லாமல் இளையராஜா வின் வீட்டிற்கு வருவது கூட கிடையாது. சபரியும் அவ்வளவு சீக்கிரத்தில் பவதாரிணியை விட்டுக் கொடுக்க மாட்டார். அவர்கள் மிகவும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்” என்று பேசினார். 

பவதாரிணிக்கு திருமணம் ஆன கதை

அவர் பேசும் போது, “ பவதாரிணிக்காக பல இடங்களில் நானும், அவளின் அம்மாவும் மாப்பிள்ளை தேடினோம். ஆனால் வந்த வரன்கள் எதுவும் தாரிணிக்கு பிடிக்கவில்லை.

இறுதியாக, செங்கல்பட்டு அருகே உள்ள பாலத்திற்கு கீழே ஒரு கன்னி கோயில் இருக்கிறது. அங்கு சென்றால் நல்ல வரன் அமையும் என்று கேள்விபட்டோம். உடனே நாங்கள் இரண்டு பேரும் அந்த கோயிலுக்கு சென்றோம். அடுத்தவாரமே அவளுக்கு நல்ல வரன் அமைந்தது. மதுரையைச் சேர்ந்த சபரி என்பவருடன் தாரிணிக்கு திருமணம் முடிவானது.

ஜாதகம் பார்த்தோம். பொருத்தம் இருந்தது. பவதாரிணிக்காக வித்தியாசம், வித்தியாசமாக நகைகள் வாங்கினார்கள். அவளின் திருமணத்திற்காக ஒட்டு மொத்த குடும்பமே ஒன்று திரண்டு இருந்தது. இளையராஜா மிகவும் சந்தோஷமாக இருந்தார். அப்படி நடந்தது தாரிணியின் கல்யாணம்” என்று பேசினார்.

பவதாரிணி கடந்த 2005 ஆம் ஆண்டு பத்திரிகை அதிபர் எஸ்.என்.ராமச்சந்திரனின் மகன் சபரி ராஜை தான் காதலித்தே கரம் பிடித்ததாக செய்திகள் உள்ளன. பல வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக ஏகப்பட்ட சிகிச்சைகளையும் மேற்கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது.” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.