Bhavatharini: செங்கல்பட்டு சாமி கொடுத்த வரம்;மதுரை மாப்பிள்ளை; ராஜா முகத்தில் சிரிப்பு! -தாரிணி திருமண கதை!
பவதாரிணிக்காக பல இடங்களில் நானும், அவளின் அம்மாவும் மாப்பிள்ளை தேடினோம். ஆனால் வந்த வரன்கள் எதுவும் தாரிணிக்கு பிடிக்கவில்லை.
பவதாரிணி கல்யாணம் சமயத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஜெயந்தி கண்ணப்பன் வாவ் தமிழா சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அவர் பேசும் போது, “ பவதாரிணிக்காக பல இடங்களில் நானும், அவளின் அம்மாவும் மாப்பிள்ளை தேடினோம். ஆனால் வந்த வரன்கள் எதுவும் தாரிணிக்கு பிடிக்கவில்லை.
இறுதியாக, செங்கல்பட்டு அருகே உள்ள பாலத்திற்கு கீழே ஒரு கன்னி கோயில் இருக்கிறது. அங்கு சென்றால் நல்ல வரன் அமையும் என்று கேள்விபட்டோம். உடனே நாங்கள் இரண்டு பேரும் அந்த கோயிலுக்கு சென்றோம். அடுத்தவாரமே அவளுக்கு நல்ல வரன் அமைந்தது. மதுரையைச் சேர்ந்த சபரி என்பவருடன் தாரிணிக்கு திருமணம் முடிவானது.
ஜாதகம் பார்த்தோம். பொருத்தம் இருந்தது. பவதாரிணிக்காக வித்தியாசம், வித்தியாசமாக நகைகள் வாங்கினார்கள். அவளின் திருமணத்திற்காக ஒட்டு மொத்த குடும்பமே ஒன்று திரண்டு இருந்தது. இளையராஜா மிகவும் சந்தோஷமாக இருந்தார். அப்படி நடந்தது தாரிணியின் கல்யாணம்” என்று பேசினார்.
பவதாரிணி கடந்த 2005 ஆம் ஆண்டு பத்திரிகை அதிபர் எஸ்.என்.ராமச்சந்திரனின் மகன் சபரி ராஜை தான் காதலித்தே கரம் பிடித்ததாக செய்திகள் உள்ளன. பல வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக ஏகப்பட்ட சிகிச்சைகளையும் மேற்கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
டாபிக்ஸ்