Actress Kanaka: அம்மா - மகள் மோதல்.. தனியாக விட்டுச் சென்ற உறவுகள்.. கனகா தனித்தீவாய் மாறிய கதை!-als jayanthi kannappan latest interview about actress kanaka untold sad controversy tragic life - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Kanaka: அம்மா - மகள் மோதல்.. தனியாக விட்டுச் சென்ற உறவுகள்.. கனகா தனித்தீவாய் மாறிய கதை!

Actress Kanaka: அம்மா - மகள் மோதல்.. தனியாக விட்டுச் சென்ற உறவுகள்.. கனகா தனித்தீவாய் மாறிய கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 30, 2024 02:42 PM IST

அதனால் அவள் பெரும்பான்மையான நேரங்களில் தனிமையாகவே இருந்தாள். உடன் ஒரு அண்ணனோ அல்லது தங்கையோ இருந்திருந்தால் கூட அவள் இவ்வளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டாள்.

கனகா
கனகா

இது குறித்து அவர் பேசும் போது, “கண்ணதாசன் எந்த நடிகையை பற்றியும் கட்டுரை எழுதியது கிடையாது. ஆனால், அவர் நடிகை தேவிகாவை பற்றி கட்டுரை எழுதினார். இன்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஏற்ற ஜோடி என்றால், அது தேவிகா தான் என்று பல ரசிகைகள் கூறக் கேட்டிருக்கிறேன். 

அவளுக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து, அவரது அப்பா,அம்மா கனகாவுடன் இல்லை.

தேவிகா மிக மிக பாசமாக இருப்பார். அவருக்கு ஒரே ஒரு பெண். கனகா என்ற புகழ்பெற்ற கோயில் ஒன்று இருக்கிறது. அந்த பெயரை வைக்க வேண்டும் என்பதற்காகத்தான், கனகாவிற்கு கனகா என்று பெயர் வைக்கப்பட்டது. 

காலப்போக்கில் தேவிகாவிற்கும், கனகாவிற்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட, இருவரும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவள் வாழ்க்கையில் நடந்த சோகம் என்னவென்றால், அவளுக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து, அவரது அப்பா,அம்மா கனகாவுடன் இல்லை. 

அதனால் அவள் பெரும்பான்மையான நேரங்களில் தனிமையாகவே இருந்தாள். உடன் ஒரு அண்ணனோ அல்லது தங்கையோ இருந்திருந்தால் கூட அவள் இவ்வளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டாள். 

அம்மா இறந்த பிறகு, அவள் சொன்னது இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

இன்னொரு விஷயம் அவளுடைய அம்மாவின் இறப்பு அவளை நிலைகுலையச் செய்து விட்டது என்றே சொல்லலாம். அம்மா இறந்த பிறகு, அவள் சொன்னது இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தேவிகாவை கொண்டு செல்லும் பொழுது, அவள், அம்மா என்னை இப்படி தனியாக விட்டுச் செல்கிறாயே இனி யார் எனக்கு இருக்கிறார் என்று சொன்னார். 

கனகா இளமைக்காலம் முழுவதும் தனியாகவே இருந்து விட்டதால்,

அந்த வார்த்தை இன்னும் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. பொதுவாக இளமையில் தனிமை மிகவும் கொடுமை என்று சொல்லலாம். கனகா இளமைக்காலம் முழுவதும் தனியாகவே இருந்து விட்டதால், அவளுக்கு பெரிதாக யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. 

அவள் அப்படியே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாள்.

அதன் பின்னர் அவள் அப்படியே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாள். கிட்டத்தட்ட  தனித்தீவு போல ஆகிவிட்டாள். ஒரு கட்டத்தில் நாங்கள் இவளை இப்படி விடக்கூடாது என்று சொல்லி அவரது வீட்டிற்கு சென்று இருந்தோம். 

ஆனால், ஜன்னல், கதவுகள் எல்லாம் பூட்டப்பட்டிருந்தன. இதனையடுத்து நாங்கள் ஒரு பேப்பரில், உனக்கு நாங்கள் இருக்கிறோம், எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லி மொபைல் போன் நம்பரை எழுதி வைத்து விட்டு வந்தோம்” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.