Pushpa 2 Reloaded: கேம் சேஞ்சருக்காக தள்ளிப் போகிறதா புஷ்பா 2 ரீலோடட்.. என்ன சொல்கிறது படக்குழு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2 Reloaded: கேம் சேஞ்சருக்காக தள்ளிப் போகிறதா புஷ்பா 2 ரீலோடட்.. என்ன சொல்கிறது படக்குழு?

Pushpa 2 Reloaded: கேம் சேஞ்சருக்காக தள்ளிப் போகிறதா புஷ்பா 2 ரீலோடட்.. என்ன சொல்கிறது படக்குழு?

Malavica Natarajan HT Tamil
Jan 09, 2025 08:30 AM IST

Pushpa 2 Reloaded: புஷ்பா 2 தி ரூல் படத்தின் ரீலோடட் வெர்ஷன் ரிலீஸ் ஆவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Pushpa 2 Reloaded: கேம் சேஞ்சருக்காக தள்ளிப் போகிறதா புஷ்பா 2 ரீலோடட்.. என்ன சொல்கிறது படக்குழு?
Pushpa 2 Reloaded: கேம் சேஞ்சருக்காக தள்ளிப் போகிறதா புஷ்பா 2 ரீலோடட்.. என்ன சொல்கிறது படக்குழு?

புஷ்பா 2: தி ரூல் ரீலோடட் வெளியீடு தள்ளிவைப்பு

இந்நிலையில், தற்போது புஷ்பா 2 ரீலோடட் பதிப்பு வெளியாக கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் "தொழில்நுட்பக் காரணங்களால், புஷ்பா 2: தி ரூல் ரீலோடட் படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது.

திட்டமிட்டபடி ஜனவரி 11 அன்று வெளியிடப்படாமல், ஜனவரி 17 அன்று திரையரங்குகளில் திரையிடப்படும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! கூடுதல் விசில் அடிக்கும் காட்சிகளுடன் நீட்டிக்கப்பட்ட பதிப்பானது உங்கள் காத்திருப்பிற்கு மதிப்புள்ளதாக இருக்கும். காட்டுத்தீ மேலும் கொழுந்துவிட்டு எரியும்." என்று பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேம் சேஞ்சர் படத்திற்கான மாற்றமா?

ஆனால், ரசிகர்கள் பலரும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அந்தப் படத்தை தெலுங்கு திரைப்பட சங்கத் தலைவர் தில் ராஜு தான் தயாரித்துள்ளார்,

மாபெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் வெற்றியடைய புஷ்பா தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக கூறி வருகின்றனர்.

மேலும், ராம் சரண் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்குப் பின் அவரது திரைப்படம் வெளியாக உள்ளதால் மாபெரும் கொண்டாட்டத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2: தி ரூல் படத்தின் வசூல் சாதனை

புஷ்பா 2: தி ரூல் படம் வெளியானதிலிருந்து பல சாதனைகளை முறியடித்து வருகிறது. படம் வசூலில் சாதனை படைத்து 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமாக உருவெடுத்துள்ளது. இந்தி மொழிமாற்றப் பதிப்பில் 800+ கோடி கிளப்பில் இணைந்த முதல் படமாகவும், உலகளவில் 1800 கோடிக்கு மேல் வசூலித்த படமாகவும் இது சாதனை படைத்துள்ளது.

தற்போது ஆமிர் கானின் தங்கல் (உலகளவில் 2000 கோடி) படத்தை முறியடித்து அதிக வசூல் செய்த இந்தியப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகையை வசூலிக்க படத்திற்கு வெறும் 32 நாட்கள் மட்டுமே ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

சுகுமார் இயக்கிய புஷ்பா 2: தி ரூல், 2021 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் படமான புஷ்பா: தி ரைஸின் தொடர்ச்சியாகும். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பராஜாகவும், ரஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாகவும், ஃபஹத் பாசில் எஸ்பி பன்வர் சிங் ஷேகாவத்தாகவும் நடித்துள்ளனர்.

இந்த ஆக்‌ஷன் நாடகத்தில் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், அனசுயா பரத்வாஜ், ராவ் ரமேஷ், தனஞ்செயா மற்றும் அஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்களான பீலிங்ஸ் மற்றும் கிசிக் ஆகியவை சூப்பர் ஹிட் பாடல்களாக மாறியுள்ளன. புஷ்பா 3: தி ராம்பேஜ் என்ற பெயரில் அடுத்ததாக ஒரு தொடர்ச்சிப் படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.