Pushpa 2 Record: சாதனை மேல் சாதனை செய்த புஷ்பா 2! அடிச்ச 10 பேருமே டான் தான்! கெத்தாக சுத்தும் புஷ்பா..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2 Record: சாதனை மேல் சாதனை செய்த புஷ்பா 2! அடிச்ச 10 பேருமே டான் தான்! கெத்தாக சுத்தும் புஷ்பா..

Pushpa 2 Record: சாதனை மேல் சாதனை செய்த புஷ்பா 2! அடிச்ச 10 பேருமே டான் தான்! கெத்தாக சுத்தும் புஷ்பா..

Malavica Natarajan HT Tamil
Jan 26, 2025 03:16 PM IST

Pushpa 2 Record: புஷ்பா 2 திரைப்படம் தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. அல்லு அர்ஜுன் நடித்த இப்படம் தற்போது மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது.

Pushpa 2 Record: சாதனை மேல் சாதனை செய்த புஷ்பா 2! அடிச்ச 10 பேருமே டான் தான்! கெத்தாக சுத்தும் புஷ்பா..
Pushpa 2 Record: சாதனை மேல் சாதனை செய்த புஷ்பா 2! அடிச்ச 10 பேருமே டான் தான்! கெத்தாக சுத்தும் புஷ்பா..

டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான புஷ்பா படம், உலகம் முழுவதும் ரூ.1,830 கோடி வசூலைக் கடந்துள்ளது. சமீபத்தில் ஜனவரி 17 ஆம் தேதி கூடுதல் காட்சிகளுடன் புஷ்பா 2 ரீலோடட் வெளியானதால், மீண்டும் வசூல் வேகம் பிடித்துள்ளது. இந்த வரிசையில், இப்படம் தற்போது மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது.

இப்படியும் ஒரு சாதனையா?

தெலுங்கு மாநிலங்களில் ஒற்றைத் திரையரங்கில் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 சாதனை படைத்துள்ளது. இதை படக்குழு இன்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா 70மிமீ திரையரங்கில் 51 நாட்களில் புஷ்பா 2 படத்திற்கு 206 காட்சிகள் ஓடியுள்ளன, ரூ.1,89,75,880 வசூல் கிடைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தை 1.04 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ரூ.1.89 கோடி வசூல் கிடைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் ஒற்றைத் திரையரங்கில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

புஷ்பா 2 மரண விவகாரம்

புஷ்பா 2 முதல் காட்சி சமயத்தில் சந்தியா திரையரங்கில் நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், அவரது மகன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் ஒரு நாள் சிறையில் இருந்தார். இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு நிரந்தர ஜாமீன் சமீபத்தில் கிடைத்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனையும் அல்லு அர்ஜுன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

புஷ்பா 2 சாதனைகள்

புஷ்பா 2 திரைப்படம் ஏற்கனவே பல சாதனைகளைப் படைத்துள்ளது. இந்தியில் ரூ.800 கோடி நிகர வசூலைக் கடந்துள்ளது. பாலிவுட்டில் இதுவரை வெளிவந்த அத்தனை படங்களைக் காட்டிலும் இந்தப் படம் சாதனை படைத்துள்ளது. எந்த பாலிவுட் நடிகருக்கும் இதுவரை சாத்தியப்படாத ரூ.700 கோடி, ரூ.800 கோடி இந்தி நிகர வசூல் என்ற சாதனையை அல்லு அர்ஜுன் படைத்துள்ளார்.

இப்படம் ஏற்கனவே ரூ.1,830 கோடி மொத்த வசூலைக் கடந்துள்ளது. இதன் மூலம் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் படங்களை முந்தி, இந்தியாவில் அதிக வசூல் செய்த படமாகியுள்ளது. தங்கல் படத்திற்குப் பிறகு அதிக வசூல் செய்த இந்தியப் படமாக புஷ்பா 2 உள்ளது. மேலும் பல சாதனைகளையும் படைத்துள்ளது.

புஷ்பா

புஷ்பா 2 படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற முதல் பாகத்தின் மூலம் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் விரும்பும் வகையில் இயக்கியுள்ளார்.

இதனால் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். பகத் பாசில், ராவ் ரமேஷ், ஜெகபதி பாபு, சுனில், ஜெகதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.