Pushpa 2 OTT: ஓடிடிக்கு செல்லும் வரையிலும் சாதனை படைத்த புஷ்பா.. பவர் ஸ்டாரை தூக்கி சாப்பிட்ட அல்லு..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2 Ott: ஓடிடிக்கு செல்லும் வரையிலும் சாதனை படைத்த புஷ்பா.. பவர் ஸ்டாரை தூக்கி சாப்பிட்ட அல்லு..

Pushpa 2 OTT: ஓடிடிக்கு செல்லும் வரையிலும் சாதனை படைத்த புஷ்பா.. பவர் ஸ்டாரை தூக்கி சாப்பிட்ட அல்லு..

Malavica Natarajan HT Tamil
Jan 30, 2025 07:14 AM IST

Pushpa 2 OTT: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம், தியேட்டர்களில் வெற்றிகரமாக 56 நாட்கள் ஓடிய பின் இன்று ஓடிடி தளத்தில் பல சாதனைகளை பெற்ற படமாக ஸ்டீரிமிங் செய்யப்படுகிறது

Pushpa 2 OTT: ஓடிடிக்கு செல்லும் வரையிலும் சாதனை படைத்த புஷ்பா.. பவர் ஸ்டாரை தூக்கி சாப்பிட்ட அல்லு..
Pushpa 2 OTT: ஓடிடிக்கு செல்லும் வரையிலும் சாதனை படைத்த புஷ்பா.. பவர் ஸ்டாரை தூக்கி சாப்பிட்ட அல்லு..

குறிப்பாக புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் தற்போதைய ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவர் ஸ்டார் பவண் கல்யாண் தெலுங்கு பேசும் மாநிலங்களில் தக்க வைத்திருந்த சாதனையை புஷ்பா 2 படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

புஷ்பா 2 ஓடிடி ஸ்டீரிமிங்

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் இன்று கிட்டத்தட்ட 56 நாட்களுக்குப் பின் ரீலோடட் வெர்ஷனாக ஓடிடியில் இன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. புஷ்பா 2 ஓடிடி ஜனவரி 30 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. புஷ்பா 2 தி ரூல் ஓடிடி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ரீலோடட் பதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமா புஷ்பா 2 தி ரூல் ஓடிடி 3 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜூனின் புதிய சாதனை

இதற்கிடையில், புஷ்பா 2 தி ரூல் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங்கைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் செய்த சாதனை ஒன்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் தான் அந்த சாதனை நிகழ்ந்துள்ளது. அதாவது எந்த தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரசிகை உயிரிழந்தாரோ அதே தியேட்டரில் தான் இந்க சாதனை நடந்துள்ளது.

பவண் கல்யாண் கோட்டை

இந்த தியேட்டர் அல்லு அர்ஜூனால் மற்ற மாநில மக்களுக்கு தெரிய வந்தாலும், தெலுங்கு பேசும் மக்களைப் பொருத்த வரை சந்தியா தியேட்டர் பவர் ஸ்டார் பவண் கல்யாணின் கோட்டையாக கருதப்படுகிறது. பவண் கல்யாணின் குஷி படம் இந்த 70 எம்.எம் தியேட்டரில் வெளியாகி வசூல் மழையை குவித்தது. இந்தப் படம் 2001ம் ஆண்டு வெளியான சமயத்தில் டிக்கெட் கட்டணம் வெறும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை தான் இருந்தது. அந்த சமயத்திலேயே குஷி படம் 1.56 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.

சாதனையை முறியடித்த அல்லு

இதைத் தொடர்ந்து, பவண் கல்யாணின் எந்த படம் வெளியானாலும் இந்த தியேட்டரில் சிறப்பு கொண்டாட்டம் நடைபெறும். இந்த தியேட்டர் பவண் கல்யாணின் வைகுண்டம் என ரசிகர்கள் செல்லப் பெயர் வைத்து அழை்து வருகின்றனர். அப்படிப்பட்ட தியேட்டரில் அல்லு அர்ஜூன் பலமான சாதனையை முன்வைத்துள்ளார். பவண் கல்யாண் படம் செய்த வசூல் சாதனையை வேறு எந்த படமும் இதுவரை முறியடிக்காமல் இருந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் இந்த தியேட்டரில் அதிக வசூல் பெற்று பவண் கல்யாணின் சாதனையை முறியடித்துள்ளது.

டிக்கெட் விலையும் காரணம்

ஆனால் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தி ரூல் இந்த சாதனையை முறியடித்தது. புஷ்பா 2 ரூ.1.56 கோடி வசூல் செய்து சந்தியா தியேட்டரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது. அதாவது, டிக்கெட் விலை இதில் முக்கிய பங்கு வகித்தது. 2001 டிக்கெட் விலையை விட 2024 ஆம் ஆண்டில் புஷ்பா 2 க்கு உயர்த்தப்பட்ட விலைக்கு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

இருப்பினும், சந்தியா தியேட்டரில் மட்டும், குஷி ரூ .1.56 கோடியும், புஷ்பா 2 தி ரூல் ரூ .1.59 கோடியும் வசூலித்தன (2025 ஆம் ஆண்டு உட்பட). இதன்மூலம் பவன் கல்யாணின் 24 ஆண்டுகால சாதனையை அல்லு அர்ஜுன் முறியடித்துள்ளார் என்ற தகவல் தெரிகிறது. புஷ்பா 2 தி ரூல் உலகம் முழுவதும் ரூ.1830 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படத்தில் அர்ஜுன் புஷ்பா ராஜ் என்ற பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார், அவர் இப்படத்தில் செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவராக மாறியுள்ளார். புஷ்பாவின் மனைவியான ஸ்ரீ வள்ளியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் இதில் மலையாள நடிகர் ஃபஹத் நடித்த போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகமான புஷ்பா 3: தி ராம்பேஜ் என்ற பெயரிடப்பட்டு இந்த அறிவிப்போடு கதை முடிகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.