வீக் எண்டில் பிக்அப் ஆகும் புஷ்பா.. பீலிங்கோடு படம் பார்க்கும் ரசிகர்கள்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வீக் எண்டில் பிக்அப் ஆகும் புஷ்பா.. பீலிங்கோடு படம் பார்க்கும் ரசிகர்கள்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

வீக் எண்டில் பிக்அப் ஆகும் புஷ்பா.. பீலிங்கோடு படம் பார்க்கும் ரசிகர்கள்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Malavica Natarajan HT Tamil
Dec 08, 2024 01:51 PM IST

இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலை தெரிக்கவிட்ட புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தின் 3ம் நாள் வசூல் நிலவரத்தை காணலாம்.

வீக் எண்டில் பிக்அப் ஆகும் புஷ்பா.. பீலிங்கோடு படம் பார்க்கும் ரசிகர்கள்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
வீக் எண்டில் பிக்அப் ஆகும் புஷ்பா.. பீலிங்கோடு படம் பார்க்கும் ரசிகர்கள்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

ரிலீசுக்கு முந்தைய நாள் திரையிடப்பட்ட ப்ரிவியூ, முதல் நாள் காட்சிகள் என அனைத்தும் சேர்த்து இவ்வளவு வசூல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்றைய நாளில் புஷ்பா திரைப்படம் கைப்பற்றிய வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 3வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 463.9 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 3வது நாளான நேற்று சுமார் ரூ.598.9 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

படத்தின் வசூல் முதல் நாளைக் காட்டிலும் 2ம் நாள் சற்று குறைந்து காணப்பட்டாலும், வார இறுதி நாளான நேற்று அதிகப்படியான வசூலை எட்டியுள்ளது. இருப்பினும், வரும் நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புதியதொரு உச்சம்

முதல் நாளில் கிட்டத்தட்ட ரூ. 175 கோடி வசூலித்த புஷ்பா 2, இந்திய பாக்ஸ் ஆபிஸில் புதியதொரு உச்சத்தை தொட்டது. இதற்கு முன்னர் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தின் ரூ. 133 கோடி வசூலை முறியடித்தது. முதல் நாளில் அதிக வசூல் பெற்ற பாலிவுட் படமான ஜவான் வசூலையே பின்னுக்கு தள்ளியது.

டிக்கெட் விலை உயர்வு

புஷ்பா 2 வசூல் வேட்டைக்கு மற்றொரு முக்கிய காரணமாக, சமீபத்தில் உயர்த்தப்பட்ட டிக்கெட் விலை உயர்வை கூறலாம். இதற்காக ஆந்திர பிரதேச அரசாங்கத்துக்கு அல்லு அர்ஜுன் நன்றி கூட தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "டிக்கெட் உயர்வுக்கு ஒப்புதல் அளித்த ஆந்திரப் பிரதேச அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முற்போக்கான முடிவு, தெலுங்குத் திரையுலகின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது" என்று பதிவிட்டார்.

முன்னதாக, புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சியை காண்பதற்கான டிக்கெட் விலை சில திரையரங்குகளில் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 944 என விற்பனை செய்யப்பட்டது.

ஆந்திரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், புஷ்பா 2 படத்துக்கு முதல் நாளில் 6 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் "லோயர் கிளாஸ்" படத்தின் டிக்கெட் விலை ரூ. 100 (ஜிஎஸ்டி உட்பட), உயர் வகுப்புக்கு ரூ. 150 (ஜிஎஸ்டி உட்பட) மற்றும் ரூ. 200 (ஜிஎஸ்டி உட்பட) வரை உயர்த்தப்படும் என்று கூறியது.

டிசம்பர் 6 முதல் டிசம்பர் 17 வரை ஒரே விலையில் ஐந்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை பார்வையாளர்கள் பெறலாம்.

இதற்கிடையே பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், நாடு முழுவதும் ரூ. 200 முதல் ரூ. 2500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

புஷ்பா 2 படம்

செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், ஜெகபதி பாபு உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்தில் இடம்பிடித்திருக்கும் ஃபிலீங்ஸ் என்ற பாடலின் கிளிப்பிங்குகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சுகுமார் இயக்கியிருக்கும் புஷ்பா 2, மூன்றாம் பாகத்துக்கான லீட் உடன் முடிவடைந்திருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.