‘கைதாகும் போதும் விளம்பர வெறியா?’ சர்ச்சையாகும் அல்லு அர்ஜூன் டி-சர்ட்.. உண்மையாவே இவர் ஃபயர் தான் போல!
முன்னதாக, அல்லு அர்ஜுன் பெட்ரூமில் இருந்தபோது போலீசார் அவரை கைது செய்ததாகவும், அப்போது அவர் ஷார்ட்ஸ் மற்றும் டிசர்ட் அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் உடை மாற்றுவதற்கு கூட நேரம் கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
புஷ்பா 2 ப்ரீமியர் காட்சியின் போது பெண் ரசிகர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தெலுங்கு மாநிலங்களில் அதிர்ச்சியை கிளப்பியது. இந்த சம்பவத்தின் போது புஷ்பா 2 டிசர்ட்டை அல்லு அர்ஜுன் அணிந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா 2 டிசர்ட் உடன் அல்லு அர்ஜுன்
டிசம்பர் 13ஆம் தேதி காலை ஹைதரபாத் வீட்டிலிருந்த அல்லு அர்ஜுனை கைது செய்த போலீசார், சிக்கட்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அல்லு அர்ஜுன் கைது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் உலா வந்த விடியோவில் அவர் புஷ்பா 2 பட புராமொஷனுக்கான டிசர்ட்டை அணிந்துள்ளார்.
முன்னதாக, அல்லு அர்ஜுன் பெட்ரூமில் இருந்தபோது போலீசார் அவரை கைது செய்ததாகவும், அப்போது அவர் ஷார்ட்ஸ் மற்றும் டிசர்ட் அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் உடை மாற்றுவதற்கு கூட நேரம் கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. முதலில் பெட்ரூமில் அணிந்திருந்த ஆடையுடனே அல்லு அர்ஜுனை லிப்டில் அழைத்து வரப்பட்டாராம்.
இதற்கிடையே போலீஸ் கைது செய்ய வந்த போது அல்லு அர்ஜுன் புஷ்பா 2 பட டிசர்ட் அணிந்து, காபி குடிப்பதுபோல் விடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த சமயத்தில் அல்லு அர்ஜுனுடன் அவரது மனைவி சிநேகா, சகோதரர் அல்லு சிரஷ், தந்தை அல்லு அரவிந்த் ஆகியோரும் உடன் இருந்தனர். விடியோவில், அவர் பொறுமை இழந்து போலீசிடம் பேசுவதை காணமுடிந்தது.
கைதின் போது புரொமோஷன் எதற்கு?
அல்லு அர்ஜுன் கைது தொடர்பான விடியோ, புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கைதின் போதும் புஷ்பா 2 புரொமோஷன் தேவைதானா என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் ஆடை மாற்றுவதற்கு அல்லு அர்ஜுனுக்கு போலீசார் போதிய நேரம் வழங்கியிருப்பது அவர் அணிந்திருக்கும் புஷ்பா 2 டிசர்ட் மூலம் தெளிவாக தெரிகிறது எனவும் கூறுகின்றனர். அதேபோல் சிலர் இந்த டிசர்ட் விஷயம் எதேச்சையாக நடந்திருக்கலாம் எனவும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
பிளான் போட்டு தூக்கிய போலீஸ்
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சிவி ஆனந்த், நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார். இதற்கிடையே அல்லு அர்ஜுன் தரப்பில் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதுடன், அவசர வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு ஜாமின் கிடைக்காவிட்டால் சனி மற்றும் ஞாயிறு நீதிமன்றம் விடுமுறை என்பதால் சிறை செல்ல நேரிடும்.
எனவே அல்லு அர்ஜுன் சிறை செல்லாமல் தப்பிப்பாரா என ரசிகர்கள் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகினரே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அல்லு அர்ஜுன் கைது வதந்தி
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவது வதந்தி என புஷ்பா 2 படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றதாகவும், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதாக உலா வரும் செய்திகள் உண்மையில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்