தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Alia Bhatt Gifts Special Things To Junior Ntr Children's

Alia Bhatt: என்டிஆர் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்த ஆலியா பட்

Aarthi V HT Tamil
Mar 28, 2023 08:22 AM IST

என்டிஆர் குழந்தைகளுக்கு ஆலியா பட் சிறப்பு பரிசுகளை அனுப்பினார்.

ஆலியா பட் - என்டிஆர்
ஆலியா பட் - என்டிஆர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனை முன்னிட்டு படக்குழுவுக்கு பாராட்டு மழை பொழிந்தது. இந்தப் படத்தில் நடித்தவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக சீதை வேடத்தில் அலியா பட் நடித்து இருந்தார்.

இந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் ஆலியா. சினிமா மட்டுமின்றி வியாபாரத்திலும் முன்னேறி வருகிறார் ஆலியா பட். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது ஆடைத் தொழிலைத் தொடங்கினார்.

இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் குழந்தைகளுக்கு எட்-ஏ-மம்மா என்ற பிராண்டிலிருந்து சிறப்புப் பரிசுகளை அனுப்பினார் ஆலியா பட். என்டிஆர் மகன்கள் அபய் ராம் மற்றும் பார்கவ் ராம் ஆகியோருக்கு ஆலியா பட் தனது பிராண்டிலிருந்து சிறப்பு பரிசுகளை அனுப்பி ஆச்சரியப்படுத்தினார்.

அலியா தனது மகன்களுக்கு பரிசுகளை அனுப்பியதற்கு என்டிஆர் மகிழ்ச்சி தெரிவித்தார். சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர், ஆலியா அனுப்பிய பரிசுகளின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதனுடன் சிறப்புக் குறிப்பு எழுதி உள்ளார். அதில், "நீங்கள் அனுப்பிய இந்த ஆடை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் முகத்தில் புன்னகையை பார்த்தேன்" என குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்