‘ஆலப்புழா ஜிம்கானா' படத்தின் ஓடிடி ரிலீஸ் - எந்த ஓடிடி.. எப்போது வருகிறது? - முழு விபரம் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ஆலப்புழா ஜிம்கானா' படத்தின் ஓடிடி ரிலீஸ் - எந்த ஓடிடி.. எப்போது வருகிறது? - முழு விபரம் இங்கே!

‘ஆலப்புழா ஜிம்கானா' படத்தின் ஓடிடி ரிலீஸ் - எந்த ஓடிடி.. எப்போது வருகிறது? - முழு விபரம் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 07, 2025 01:40 PM IST

ஆலப்புழாவைச் சேர்ந்த நஸ்லெனும் அவனது நண்பர்களும் 12ம் வகுப்பில் தோல்வியடைந்த நிலையில், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரியில் சேர்வதற்காக பாக்ஸிங் கற்றுக்கொள்ளலாம் எனக் முடிவெடுக்கிறார்கள்.

‘ஆலப்புழா ஜிம்கானா' படத்தின் ஓடிடி ரிலீஸ் -  எந்த ஓடிடி.. எப்போது வருகிறது? - முழு விபரம் இங்கே!
‘ஆலப்புழா ஜிம்கானா' படத்தின் ஓடிடி ரிலீஸ் - எந்த ஓடிடி.. எப்போது வருகிறது? - முழு விபரம் இங்கே!

எப்போது ஓடிடியில் வரும்?

மலையாளத்தில் இருந்து வெளியான பிரேமலு படம் அங்கு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.இதனால், அந்தப்படத்தில் நடித்த நஸ்லென் கே கஃபூரும், மமிதாவும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து பிரபலமாகி விட்டனர்.

தற்போது மமிதா சூர்யாவுடன் அவரது 46 வது படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். நஸ்லென் கஃபூருக்கு கடைசியாக வெளியான ஆலப்புழா ஜிம்கானா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான இந்தப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸிங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் 65 கோடி வசூல் செய்தது. ஐஎம்டிபி -யில் 7.2 சதவீத மதிப்பீட்டை பெற்று இருந்தது.

இந்தப்படத்தின் ஓடிடி ரிலீஸூக்காக மக்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், அந்தப்படம் தொடர்பான ஓடிடி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஆலப்புழா ஜிம்கானா ஜூன் 13 ஆம் தேதி சோனில் லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி லைவ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறது.

என்ன கதை?

ஆலப்புழாவைச் சேர்ந்த நஸ்லெனும் அவனது நண்பர்களும் 12ம் வகுப்பில் தோல்வியடைந்த நிலையில், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரியில் சேர்வதற்காக பாக்ஸிங் கற்றுக்கொள்ளலாம் எனக் முடிவெடுக்கிறார்கள்.

இதற்காக ஆலப்புழா மாவட்டத்தின் பிரபல குத்துச்சண்டை பயிற்சி மையமான 'ஆலப்புழா ஜிம்கானா'-வில் சேர்கிறார்கள். பாக்ஸிங்கை விளையாட்டாக நினைத்த அவர்களுக்கு அது தன்னுடைய உண்மையான முகத்தை காண்பிக்கிறது. ஆனாலும் விடாத அவர்கள், மாநில அளவிலான அமெச்சூர் குத்துச்சண்டை கோப்பைக்குத் தயாராகிறார்கள். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது மீதிக்கதை!