Akshay: ஐ.எஸ்.பி.எல் சீசன் 2 இறுதிப்போட்டி.. மகளுடன் வந்த ‌அக்‌ஷய் குமார்.. அமிதாப்பை பார்த்ததும் செய்த செயல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Akshay: ஐ.எஸ்.பி.எல் சீசன் 2 இறுதிப்போட்டி.. மகளுடன் வந்த ‌அக்‌ஷய் குமார்.. அமிதாப்பை பார்த்ததும் செய்த செயல்

Akshay: ஐ.எஸ்.பி.எல் சீசன் 2 இறுதிப்போட்டி.. மகளுடன் வந்த ‌அக்‌ஷய் குமார்.. அமிதாப்பை பார்த்ததும் செய்த செயல்

Marimuthu M HT Tamil Published Feb 16, 2025 09:34 AM IST
Marimuthu M HT Tamil
Published Feb 16, 2025 09:34 AM IST

Akshay:பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் அமிதாப் பச்சனின் கால்களைத் தொட்டு வணங்கிய சம்பவம் பலரிடைய கவனத்தை ஈர்த்தது.

Akshay: ஐ.எஸ்.பி.எல் சீசன் 2 இறுதிப்போட்டி.. மகளுடன் வந்த ‌அக்‌ஷய் குமார்.. அமிதாப்பை பார்த்ததும் செய்த செயல்
Akshay: ஐ.எஸ்.பி.எல் சீசன் 2 இறுதிப்போட்டி.. மகளுடன் வந்த ‌அக்‌ஷய் குமார்.. அமிதாப்பை பார்த்ததும் செய்த செயல்

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் போட்டியின் (ஐ.எஸ்.பி.எல்), சீசன் 2 போட்டியில் இறுதிப் போட்டியில் அக்ஷய் குமார், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரபலங்களின் பல வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வெளிவந்துள்ளன. ஐ.எஸ்.பி.எல் இறுதிப் போட்டியின் இரண்டாவது சீசன் தானேவில், மஜ் கி மும்பை மற்றும் ஸ்ரீநகர் கா வீர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. 

மஜ்ஹி மும்பை அணிக்கு ஆதரவாக பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன், இந்த கிரிக்கெட் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் மைதானத்தின் விஐபி ஸ்டாண்டில் சச்சின் டெண்டுல்கருடன் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. 

ரசிகர்களை ஈர்த்த உடைகள்:

இந்த போட்டியைப் பார்க்க அமிதாப் ஒரு வெள்ளை ஹூடி நிற உடை அணிந்திருந்தார். மேலும் அதில் மஜ்ஹி மும்பை அணியின் லோகோ இருந்தது. அப்போது சச்சின் அச்சிடப்பட்ட சட்டை மற்றும் பேண்ட் அணிந்து காணப்படுகிறார். 

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீநகர் கே வீர் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளரான அக்ஷய் குமாரும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் கருப்பு கோடிட்ட சட்டை மற்றும் பேன்ட் அணிந்திருந்தார். 

உடன் அக்ஷய்யின் மகள் நிதாரா பாட்டியாவும் அவருடன் போட்டியைக் காண வந்து இருந்தார். அவள் வெள்ளை நிற டாப் மற்றும் டெனிம்ஸ் உடையினை அணிந்திருந்தாள். அவருடன் அவரது நண்பர்களும் போட்டியைக் காண வந்திருந்தனர்.

வைரல் ஆன வீடியோ:

இதுதொடர்பாக வைரலான ஒரு வீடியோவில், அமிதாப் பச்சன் தனது ரசிகர்களை களத்தில் சந்தித்து வாழ்த்துவதைக் காண முடிந்தது. அப்போது ஒரு குழந்தையின் மீதும் அன்பைப் பொழிந்தார். மற்றொரு வீடியோவில், அக்ஷய் குமார், மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப்பின் கால்களைத் தொட்டு கட்டிப்பிடிப்பதைக் காண முடிந்தது. இருவரும் சிறிது நேரம் உரையாடி சிரித்தனர். 

நெரிசலான தாடோஜி கொண்டதேவ் ஸ்டேடியத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீநகர் கே வீர் அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மஜ்ஹி மும்பை அணி பட்டத்தை வென்றது.

வரவிருக்கும் புதிய படங்கள்:

பிரியதர்ஷன் இயக்கும் ’பூத் பங்களா’ படத்தில் அக்ஷய் நடித்து வருகிறார். இப்படத்தில் தபு மற்றும் பரேஷ் ராவல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூரின் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் தயாரித்த பூத் பங்களா, அக்ஷயின் கேப் ஆஃப் குட் பிலிம்ஸுடன் இணைந்து ஏப்ரல் 2, 2026அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நடிகை வாமிகா கபி ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தகவல் பரவியுள்ளது. 

அடுத்து அக்ஷய் குமார், ’கேசரி அத்தியாயம் 2-தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் ஜாலியன் வாலாபாக்’ படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இதில் மாதவன் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர் சி.சங்கரன் நாயரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் ஏப்ரல் 18, 2025அன்று வெளியிடப்படும். இப்படத்தை கரண் சிங் தியாகி இயக்கியுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த உண்மையை வெளிக்கொணர ஆங்கிலேய அரசுக்கு எதிராக சி.சங்கரன் நாயர் போராடினார். அந்தக் கதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. 

அமிதாப் பச்சன், பிரபலமான தொலைக்காட்சி விநாடி வினா நிகழ்ச்சியான ’கோன் பனேகா குரோர்பதி (கேபிசி) 16’-ஐ தொகுத்து வழங்கி வருகிறார். அவர் கடைசியாக வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதுகலை கட்டுமானப்பொறியியல் துறையில் பட்டம்பெற்றவர். விகடனில் 2014-15க்கான தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றவர். 11ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு,காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் அனுபவம் கொண்டவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்த இவரது ஊடகப்பயணம், தாலுகா நிருபர், விகடன், மின்னம்பலம், காவேரி நியூஸ் டிவி, நியூஸ் ஜெ டிவி, ஈடிவி பாரத் தமிழ்நாடு வரை பயணிக்கச் செய்து, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் இவரை சேர்த்துள்ளது. அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதக்கூடியவர். சினிமாவில் இயக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது, சிறுகதை எழுதுவது மிகப்பிடித்தமான பணிகள்!
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.