Netflix: அடேங்கப்பா..ஒரே நாளில் இத்தனை அறிவிப்பா? தட்டித் தூக்கும் நெட்ஃபிளிக்ஸ்
2023 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கும் தமிழ் படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

அமேசான் உள்ளிட்ட பிற ஓடிடி தளங்களில் பிராந்திய மொழி படங்கள் அதிகம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளிநாட்டு மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தது;
இதனால் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் குறைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிற ஓடிடி நிறுவனங்களுடனான போட்டியை சமாளிக்க நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் முக்கியமான படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றி வருகிறது; அந்த வகையில் நேற்றைய தினம் 2023 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனம் கைப்பற்றி இருக்கும் 16 தெலுங்கு படங்களின் விவரங்களை வெளியிட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் அதே பாணியில் 2023 ஆம் ஆண்டு தங்களது ஓடிடி தளத்தில் வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
அந்த படங்களின் விபரங்கள் இங்கே!