AK63 Update: ஆறு மாதத்தில் அஜித் செய்ய இருக்கும் தெறி சம்பவம்! வெளியான AK 63 படத்தின் அட்டகாசமான டைட்டில்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ak63 Update: ஆறு மாதத்தில் அஜித் செய்ய இருக்கும் தெறி சம்பவம்! வெளியான Ak 63 படத்தின் அட்டகாசமான டைட்டில்

AK63 Update: ஆறு மாதத்தில் அஜித் செய்ய இருக்கும் தெறி சம்பவம்! வெளியான AK 63 படத்தின் அட்டகாசமான டைட்டில்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2024 01:04 AM IST

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AK63 படத்தின் அப்டேட்டாக படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கி ஆறு மாதத்தில் பொங்கல் வெளியீடாக படத்தை வெளியிட உள்ளனர்.

AK 63 பட டைட்டில் அறிவிப்பு
AK 63 பட டைட்டில் அறிவிப்பு

இதை்தொடர்ந்து இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அஜித்தின் 63வது படத்துக்கு, குட் பேட் அக்லி என அட்டகாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பட டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 2024இல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோயின், இதர நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த படம் ஜூன் மாததத்தில் தொடங்க இருக்கும் நிலையில் ஆறு மாததத்தில் நிறைவடைந்து வெளியாக இருப்பதால் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்து அஜித் ரசிகர்கள் விருந்து காத்திருக்கிறது. 

கமல், விஜய் பாணியில் ஆங்கில தலைப்பு 

அஜித் படங்களின் தலைப்புகள் இதுவரை தமிழிலேயே இருந்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக முழுமையாக ஆங்கில தலைப்பு இந்த படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடித்து வரும் புதிய படத்துக்கு தக் லைஃப் எனவும், விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு கோட் எனவும் இருந்து வருகிறது. தற்போது இவர்களின் பாணியில் அஜித்தின் படத்துக்கும் குட் பேட் அக்லி என முழுவதுமாக ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

பொதுவாகவே அஜித் படம் குறித்த எந்த தகவல், அப்டேட் என்றாலும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடுவார்கள். அந்த வகையில், AK 63 படம் அப்டேட் குறித்த சர்ப்ரைஸ் அறிவிப்பால் திக்குமுக்காடி போன அஜித் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான சில விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் கவுண்டவுனை பகிர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தற்போது படத்தின் அப்டடேட் வெளியாகியிருக்கும் நிலையில் அதை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

விடாமுயற்சி ஷுட்டிங்கில் அஜித்குமார்

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்தது.

இதன்பின்னர் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்னர் நாடு திரும்பிய அஜித் உடல் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் காதுக்கு பக்கத்தில் இருந்த நரம்பில் அருகே இருந்த சின்ன வீக்கத்தை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

தற்போது ஓய்வில் இருந்து வரும் அஜித் விரைவில், விடாமுயற்சி ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ரெஜினா காசன்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உள்பட பலரும் நடிக்கிறார்கள். மங்காத்தா படத்துக்கு பின்னர் அஜித் - அர்ஜுன் ஆகியோர் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://www.facebook.com/HTTamilNews

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.