Magizh Thirumeni: ‘விக்னேஷ் சிவனுக்கு நன்றி.. அஜித் சொன்ன அந்த வார்த்தை.. அன்னைக்கு இரவு தூக்கமே இல்ல’ - மகிழ்
Magizh Thirumeni: நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் விக்னேஷ் சிவனை இரண்டு, மூன்று தடவை சந்தித்து இருக்கிறேன். அவர் மிகவும் நல்ல பையன். அவர் அந்தப் படத்தில் இருந்து விலகிய பின்னரும், என்னை பற்றி மீடியாவில் மிக அழகாக பேசினார். - மகிழ் திருமேனி

Magizh Thirumeni: அஜித்தை முதன்முறையாக சந்தித்த அனுபவத்தை இயக்குநர் மகிழ் திருமேனி டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
விக்னேஷ் சிவனுக்கு நன்றி
அதில் அவர் பேசும் போது, ‘ அஜித்தின் திரைப்படத்தை முதலில் விக்னேஷ் வந்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை; அவர்கள் இணையவில்லை. இதனையடுத்து, அந்தப் படம் என்னை நோக்கி வந்தது. ஆனால், நாங்கள் உடனடியாக அந்தப் படத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த இடத்தில் நான் விக்னேஷ் சிவனுக்கு
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் விக்னேஷ் சிவனை இரண்டு, மூன்று தடவை சந்தித்து இருக்கிறேன். அவர் மிகவும் நல்ல பையன். அவர் அந்தப் படத்தில் இருந்து விலகிய பின்னரும், என்னை பற்றி மீடியாவில் மிக அழகாக பேசினார்.
அஜித் சொன்ன வார்த்தை
சுரேஷ் சந்திராவுடன் நான் கிட்டத்தட்ட பல வருடங்களாக பழகி வருகிறேன். ஆனால், ஒருமுறை கூட அவரிடம் சென்று அஜித் சாரிடம் எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கி கொடுங்கள் என்று நான் கேட்டதில்லை. நாம் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், அதற்கான தகுதியை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன்.
இந்த நிலையில் ஒரு நாள் சுரேஷ் சந்திரா சாரிடம் இருந்து எனக்கு கால் வந்தது. அவர் என்னிடம், அஜித்தின் அடுத்தப் படத்தை நீங்கள் தான் இயக்குகிறீர்கள் என்றார். அதைத் தொடர்ந்து அடுத்த வாரம் நீங்கள் லண்டனுக்கு கிளம்ப வேண்டும். அஜித் சார் உங்களை அழைப்பார் என்றார். தொடர்ந்து அஜித் அழைத்தார். அவர் என்னிடம் சொன்ன வார்த்தை; மகிழ், என்னை கண்மூடித்தனமாக நம்புங்கள் என்றார்.
இரவு தூக்கமே வரவில்லை
அவர் என்னிடம் பேசிய அந்த நாள் எனக்கு இரவு தூக்கமே வரவில்லை; அந்த வாய்ப்பை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டே இருந்தேன். இதனையடுத்து படம் தொடர்பாக பேசுவதற்கு லண்டன் சென்றேன்; அங்கு அஜித் சாரும் வந்தார்; அப்போதுதான் அஜித் சாரை நான் முதன்முறையாக சந்தித்தேன்.
என்னை பார்த்தவுடன் அவர் மகிழ் சார் என்று கூறி கட்டிப்பிடித்தார்; மிக நீண்ட நாட்களாக பழகிய ஒரு நபர் போல, அவர் என்னிடம் பழகினார்; அவர் அதை வேண்டுமென்றே செய்வது கிடையாது அவரது இயல்பாகவே அதுதான் இருக்கிறது. அன்றிலிருந்து எனக்கு அவரது நட்பு தொடங்கியது.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

டாபிக்ஸ்