Magizh Thirumeni: 10 நாட்கள் 24 மணி நேர உழைப்பு.. ‘கலைத்தாய் கைவிட மாட்டாள் அல்லவான்னு கேட்டார்’.. - மகிழ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Magizh Thirumeni: 10 நாட்கள் 24 மணி நேர உழைப்பு.. ‘கலைத்தாய் கைவிட மாட்டாள் அல்லவான்னு கேட்டார்’.. - மகிழ்

Magizh Thirumeni: 10 நாட்கள் 24 மணி நேர உழைப்பு.. ‘கலைத்தாய் கைவிட மாட்டாள் அல்லவான்னு கேட்டார்’.. - மகிழ்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 29, 2025 10:54 AM IST

Magizh Thirumeni: கிட்டத்தட்ட 24 மணி நேரம் தொடர்ந்து உழைத்தார். அவருக்கு தூக்கம் என்பது இந்த ஷூட்டிங்கில் இருந்து, அந்த ஷூட்டிங்கிற்கு செல்லும் அந்தப் பயண இடைவெளிதான். - மகிழ் திருமேனி!

Magizh Thirumeni: 10 நாட்கள் 24 மணி நேர உழைப்பு.. ‘கலைத்தாய் கைவிட மாட்டாள் அல்லவான்னு கேட்டார்’.. - மகிழ்
Magizh Thirumeni: 10 நாட்கள் 24 மணி நேர உழைப்பு.. ‘கலைத்தாய் கைவிட மாட்டாள் அல்லவான்னு கேட்டார்’.. - மகிழ்

சமுதாய பொறுப்பு அதிகம்

இது குறித்து அவர் பேசும் போது, ‘அஜித்திற்கு சமுதாய பொறுப்பு மிக மிக அதிகம். அவர் இந்த சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு பல விஷயங்களில் உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான மனப் போக்கு.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தான ஆழ்ந்த கவலை அவருக்கு இருந்ததுதான், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அவரை செய்ய வைத்தது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அவர் போன்ற ஒரு மாஸ் ஹீரோ செய்வதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.

விடா முயற்சி எப்படியான படம்?

‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அவரது இமேஜ் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றுதான் நடித்திருக்கிறார்; காரணம் என்னவென்றால் இந்த படத்தில் அவருக்கு பெரிய இண்ட்ரொடக்சன் கிடையாது; பஞ்ச் டயலாக்ஸ் கிடையாது, இன்டர்வல்பிளாக் கிடையாது. ஒரு ஆக்சன் காட்சிக்கான பெரிய பில்டப் கிடையாது. ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் எப்படி சமாளிப்பான் என்ற ரீதியில் தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

‘விடாமுயற்சி’ திரைப்படம் ஆணாதிக்கத்திற்கான எதிரான திரைப்படம்; பெண்களுக்கு இந்த திரைப்படம் மிகவும் கனெக்ட் ஆகும். ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஷூட்டிக்கின் போது, அவர் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கையும் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; காரணம் என்னவென்றால், அவர் சில மாதங்களில் ரேசிங் செல்ல வேண்டி இருந்தது. இதனால் பகலில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிலும், இரவில் குட் பேட் அட்லி படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார்.

24 மணி நேரம் தொடர்ந்து

கிட்டத்தட்ட 24 மணி நேரம் தொடர்ந்து உழைத்தார். அவருக்கு தூக்கம் என்பது இந்த ஷூட்டிங்கில் இருந்து, அந்த ஷூட்டிங்கிற்கு செல்லும் அந்தப் பயண இடைவெளிதான். இதுபோல அவர் பத்து நாட்கள் வரை தொடர்ந்து வேலை செய்தார். நாங்கள் அவரிடம் இவ்வளவு முயற்சி தேவையா என்று கேட்டோம். அதற்கு அவர் இல்லை இல்லை.. இது எனக்கு தொழில் சார்ந்த கமிட்மெண்டுகள். இதை முடித்துக்கொடுத்துவிட்டு ரேசிங்கிற்கு செல்ல வேண்டும் என்றார்.

இப்படி உழைத்து முடித்துவிட்டு, அவர் என்னிடம் இப்போது கலைத்தாய் என்னை கைவிட மாட்டார்கள் அல்லவா என்று கேட்டார். அப்படி வேலை செய்தார் முதல் படத்தில் அவர் எவ்வளவு அர்ப்பணிப்போடு வேலை செய்தாரோ, அதே அளவு அர்பணிப்போடு இப்போதும் வேலை செய்து வருகிறார்’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.