Ajithkumar: ‘நல்லா வருவேன்னு சொன்னாங்க ஆனா அந்த விபத்து.. ரொம்ப கஷ்டகாலம்.. மோட்டிவேஷனே கிடைக்காம’ -அஜித்குமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithkumar: ‘நல்லா வருவேன்னு சொன்னாங்க ஆனா அந்த விபத்து.. ரொம்ப கஷ்டகாலம்.. மோட்டிவேஷனே கிடைக்காம’ -அஜித்குமார்

Ajithkumar: ‘நல்லா வருவேன்னு சொன்னாங்க ஆனா அந்த விபத்து.. ரொம்ப கஷ்டகாலம்.. மோட்டிவேஷனே கிடைக்காம’ -அஜித்குமார்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 30, 2025 06:00 AM IST

Ajithkumar: எங்காவது சென்று அந்த மோட்டிவேஷனை பெற்றுக் கொள்ளலாம் என்று தான் நான் இங்கு வந்தேன். நான் கார் ரேசிங்கிற்குள் மீண்டும் வந்தேன். கார் ஓட்டும்போது அதைப்பற்றி யாருமே கேட்கவில்லை.

Ajithkumar: ‘நல்லா வருவேன்னு சொன்னாங்க ஆனா.. அந்த விபத்து; ரொம்ப கஷ்டகாலம்.. மோட்டிவேஷனே கிடைக்காம’ -அஜித்குமார்
Ajithkumar: ‘நல்லா வருவேன்னு சொன்னாங்க ஆனா.. அந்த விபத்து; ரொம்ப கஷ்டகாலம்.. மோட்டிவேஷனே கிடைக்காம’ -அஜித்குமார்

பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

வாய்ப்புகள் வந்த பொழுது அதை என்னால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு மோட்டிவேஷனே இல்லாமல் சென்று விட்டது. அப்போது நான் நடித்த படங்களும் பெரிதான வெற்றியைப் பெறவில்லை. வாழ்க்கை கஷ்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. எனக்கு மோட்டிவேஷன் கிடைக்கவில்லை. 

எங்காவது சென்று அந்த மோட்டிவேஷனை பெற்றுக் கொள்ளலாம் என்று தான் நான் இங்கு வந்தேன். நான் கார் ரேசிங்கிற்குள் மீண்டும் வந்தேன். கார் ஓட்டும்போது அதைப்பற்றி யாருமே கேட்கவில்லை. ஆனால், அதனை ஒரு கட்டத்தில் நான் விட்ட பொழுது, ரேசை பற்றிச் சொல்லுங்கள்..சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

இது உண்மையில் வருத்தப்பட வேண்டிய விஷயம். அதன் பின்னர் நான் ஒரு கட்டத்தில் ரேசிங்கை விட்டு ஒதுங்க முடிவு செய்த காரணம் என்னுடைய ரசிகர்கள்தான். அவர்கள் அந்த சமயத்தில் மிகவும் வருத்தப்பட்டார்கள். காரணம், என்னுடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. அதன் பின்னர்தான் சினிமாவில் மிகுந்த கவனம் செலுத்தினேன்.’ என்று பேசினார்.

துபாய் கார் ரேசில் வெற்றி

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற துபாய் 24H கார் ரேஸ் போட்டியில் அஜித்குமார் ரேசிங் என்ற தனது அணியுடன் பங்கேற்றார் நடிகர் அஜித்குமார். இந்த போட்டியில் பல்வேறு இடர்பாடுகளை கடந்து அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை புரிந்தது. வெற்றி பெற்ற அஜித் குமார் இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி சர்குட்டில் வலம் வந்தது உணர்வு பூர்வமான விஷயமாக அமைந்தது

இதைத்தொடர்ந்து தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025இல் அஜித் குமாரின் ரேசிங் அணி பங்கேற்கவுள்ளது.  அஜித்குமார் நடித்திருக்கும் புதிய படமான விடாமுயற்சி பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, அண்மையில் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு மகிழ்ச்சி செய்தியாக வந்தது. 

மூன்று பேருக்கு பத்மபூஷண் விருது

அஜித்குமாருடன் தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் இருவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை பிரிவில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய அஜித்குமாருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.