Ajithkumar: ‘ஹீராவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒன்னா வாழ்ந்தோம்.. அவ போதை பொருளுக்கு அடிமையாகி’ -அஜித் த்ரோபேக்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithkumar: ‘ஹீராவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒன்னா வாழ்ந்தோம்.. அவ போதை பொருளுக்கு அடிமையாகி’ -அஜித் த்ரோபேக்!

Ajithkumar: ‘ஹீராவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒன்னா வாழ்ந்தோம்.. அவ போதை பொருளுக்கு அடிமையாகி’ -அஜித் த்ரோபேக்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 13, 2025 02:14 PM IST

Ajithkumar ‘எனக்கு ஹீராவை மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லாமே மாறிவிட்டது; நான் முன்பு பார்த்த கீரா இப்போது இல்லை; அவர் நிறைய மாறிவிட்டார். அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார்’ - அஜித் த்ரோபேக்!

Ajithkumar: ‘கீராவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒன்னா வாழ்ந்தோம்.. அவ போதை பொருளுக்கு அடிமையாகி’ -அஜித் த்ரோபேக்!
Ajithkumar: ‘கீராவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒன்னா வாழ்ந்தோம்.. அவ போதை பொருளுக்கு அடிமையாகி’ -அஜித் த்ரோபேக்!
அஜித்
அஜித்

பிரேக் டவுன் ஆனது

நேற்றைய தினம் இவர் துபாயில் நடைபெற்ற துபாய் 24ஹெச் ரேசில் பங்கு பெற்று 9 9 1 பிரிவில் மூன்றாம் பரிசை தட்டிச்சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது. பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்து, அதன் பின்னர் ட்ராக்கில் கார் பிரேக் டவுன் ஆனது என பல தடைகளை தாண்டி அவர் இந்த சாதனையை செய்திருக்கிறார்.

ரேசில் அவர் வெற்றி பெற்றதை பார்த்து அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உள்ளிட்டவர்கள் வெளிப்படுத்திய எமோஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலரும் ஷாலினிக்கும் அஜித்துக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் ஷாலினி, அஜித் வாழ்க்கையில் வருவதற்கு முன்னதாக அஜித்துக்கு நடிகை ஹீரா உடன் இருந்த காதல் பற்றி இங்கே பார்க்கலாம்.

 

கீரா
கீரா

காதல் கோட்டை காதல்

காதல் கோட்டை திரைப்படத்தின் போது தான் ஹீராவும், அஜித்தும் சந்தித்துக் கொண்டார்கள்; அப்போது அவர்களுக்கு இடையேயான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலுக்குள் நுழைய ஆரம்பித்தது; இதனையடுத்து அவர்கள் இணைந்த தொடரும் திரைப்படத்தில், காதல் மலர்ந்து இருவரும் காதலர்களாக வலம் வரத்தொடங்கினார்கள்.

அஜித் தன்னுடைய காதலை பொழியும் வண்ணம் ஹீராவுக்கு காதல் கடிதங்களையெல்லாம் எழுதியதாக கூறப்படுகிறது; ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், ஹீராவின் அம்மா, அஜித்தை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் அவ்வளவு சின்ன வயதிலேயே ஹீரா கல்யாணம் செய்து கொண்டால் கீராவின் கெரியர் காலியாகிவிடும் என்று திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

உறவில் விரிசல்

இதனையடுத்துஅஜித் மற்றும் ஹீராவின் உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது; கீராவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம் அவர்களது காதல் முறிவுக்கு காரணமாக அமைந்தது; 1998 ஆம் ஆண்டு இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர்.

இந்த பிரேக்கப் தொடர்பாக அஜித் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய பொழுது, ‘நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம்; எனக்கு கீராவை மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லாமே மாறிவிட்டது; நான் முன்பு பார்த்த ஹீரா இப்போது இல்லை; அவர் நிறைய மாறிவிட்டார். அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார்’ என்று பேசினார்

தகவல் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.