Ajithkumar: 5 பயிற்சி செஷன்கள்.. போர்ச்சுகல் ரேஸ் முதல் சுற்றில் தகுதி.. தனித்துவ சாதனை புரிந்த அஜித்குமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithkumar: 5 பயிற்சி செஷன்கள்.. போர்ச்சுகல் ரேஸ் முதல் சுற்றில் தகுதி.. தனித்துவ சாதனை புரிந்த அஜித்குமார்

Ajithkumar: 5 பயிற்சி செஷன்கள்.. போர்ச்சுகல் ரேஸ் முதல் சுற்றில் தகுதி.. தனித்துவ சாதனை புரிந்த அஜித்குமார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2025 09:35 PM IST

Ajithkumar: தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடரின் முதல் சுற்றுக்கு அஜித்குமார் தகுதி பெற்றுள்ளார். அத்துடன் தனித்துவமான சாதனை ஒன்றையும் அவர் புரிந்துள்ளார்.

5 பயிற்சி செஷன்கள்.. போர்ச்சுகல் ரேஸ் முதல் சுற்றில் தகுதி.. தனித்துவ சாதனை புரிந்த அஜித்குமார்
5 பயிற்சி செஷன்கள்.. போர்ச்சுகல் ரேஸ் முதல் சுற்றில் தகுதி.. தனித்துவ சாதனை புரிந்த அஜித்குமார்

துபாய் ரேஸ் போட்டியை தொடர்ந்து அடுத்து போர்ச்சுகலில் இருக்கும் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் அஜித்குமார்.

முதல் சுற்றில் தகுதி

தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025இல் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கவுள்ளது. இந்த தொடரின் முதல் சுற்றுக்காக போர்ச்சுகலின் போர்டிமாவோ பந்தய சுற்று பகுதியில், பயிற்சியாளர் மாத்யூ டெட்ரியுடன் அஜித்குமார் இருக்கும் புகைப்படங்களும் வைரலாகின. அஜித்குமார் ரேஸிங் அணியின் ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து போர்டிமாவே சர்குட்டில் நடைந்த முதல் சுற்று போட்டிக்கு அஜித்குமார் தகுதி பெற்றுள்ளார்.

இதுபற்றி அஜித்குமாரின் மேனேஜரான சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "போர்ச்சுகலின் போர்டிமாவோ சர்குட்டில், தெற்கு ஐரோப்பிய தொடரின் முதல் சுற்றில் AK தகுதி பெற்றுள்ளார். 4.653 கிமீ சுற்றுவட்டத்தை, ஒரு சுற்றுக்கு 1.49.13 வினாடிகள் அவர் சுற்றி முடித்தார். 5 பயிற்சி செஷன்களுக்கு பிறகு இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக அமைந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் அணி பங்கேற்கும் இந்த ரேஸ் போட்டிகள் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் நடைபெறவுள்ளது.

தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர்

தெற்கு ஐரோப்பிய பிராந்தியத்துக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கார் பந்தயமாக இது அமைந்துள்ளது. ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் இரு நாள்கள் போட்டியாக நடக்கும் இந்த ரேஸ் பந்தயத்தில் அதிகபட்சமாக 30 கார்கள் வரை பங்கேற்கும். அத்துடன் பந்தயத்தின் டிராக் நேரம் 6 மணி நேரமாக இருக்கும். மிகவும் சவால் மிக்க கார் பந்தயமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

ஏனென்றால் நிலையற்ற வானிலை பந்தய வீரர்களுக்கு பெரும் சோதனையாக அமைவதோடு, அவர் எப்போது மிக துல்லியமாக செயல்பட கட்டாயத்தை உருவாக்கும்.

முன்னதாக துபாய் ரேஸில் பெற்ற வெற்றி குறித்து அஜித் குமார் பேசியதாவது, "நண்பர்கள், குடும்பத்தினர், என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஒன்றை சொல்லி கொள்கிறேன். இந்த ஹீரோக்கள் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.

வெளிப்படைத்தன்மையுடன் இருந்தார்கள்

ரேஸிங் உலகத்தை பொறுத்தவரை பலரும் உங்களுக்கு உதவ முன் வரமாட்டார்கள். உங்கள் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். அப்படிதான் ரேஸிங்கில் பல ட்ரைவர்கள் தங்களது டேட்டாக்கள், எஞ்ஜினியர்கள் பற்றி பகிர்ந்து கொள்ள மாட்டர்கள். ஆனால் இவர்கள் அப்படியில்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் இருந்தார்கள். எனக்கு தேவையான விஷயங்களை அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். நாங்கள் வெற்றியுடன் இந்த இடத்தில் நிற்பதில் உறுதியாக இருந்தார்கள். எனவே இவர்கள் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை.

ஷாலினிக்கு நன்றிகள்

எனவே டீம் அஜித்குமார் ரேஸிங் அடுதடுத்த ஆண்டுகளில் நடக்கும் ரேஸிங்கிலும் இடம்பெறுவார்கள் என நம்புகிறேன். இங்கு வந்து உங்களது அன்பையும், ஆதரவையும் அளித்த அனைவருக்கும் நன்றிகள். என்னனை ரேஸிங்குக்கு அனுமதித்த ஷாலினிக்கு நன்றிகள்" என்று பேசினார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.