‘8 மாதங்களில் 42 கிலோ எடை குறைத்தேன்.. கெரியர் முடிஞ்சிட்டு சொல்றவங்களுக்கு என்னொட பதில் இதுதான்’ - அஜித்குமார் பேட்டி!
2024 ஆகஸ்ட் முதல் இன்று வரை கடந்த 8 மாதங்களில் 42 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறேன்; சரியான உணவு கட்டுப்பாடு, உணவு முறைகள், நீச்சல், சைக்கிளிங் போன்றவை என் உடல் எடையை குறைக்க உதவி இருக்கின்றன. - அஜித்குமார் பேட்டி!

‘8 மாதங்களில் 42 கிலோ எடை குறைத்தேன்.. கெரியர் முடிஞ்சிட்டு சொல்றவங்களுக்கு என்னொட பதில் இதுதான்’ - அஜித்குமார் பேட்டி!
அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், அடுத்த சில மாதங்களுக்கு முழுக்க, முழுக்க ரேசிங்கில் கவனம் செலுத்தப்போகும் அஜித் தன்னுடைய சினிமா மற்றும் ரேசிங் கெரியர் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசியதாவது, ‘ஒரு காலகட்டத்தில் என்னுடைய உடல் எடை அதிகமாக இருந்தது; ஆனால், ரேசிங்கிற்கு திரும்ப வேண்டும் என்று முடிவு எடுத்த நாளிலிருந்து, மீண்டும் எடையைக் குறைத்து ஃபிட்டாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்கான அவசியமும் எனக்கு புரிந்தது.
