Ajithkumar: திரும்பவும் சொல்றேன்.. மதம் மத்தவங்கள வெறுக்க வைக்கும்.. ட்ராவல் பண்ணும் போதுதான் நீங்க யார்னு’ -அஜித்குமார்
பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. இது என்னை புத்துணர்வாக்கி, உத்வேகப்படுத்தி மீண்டும் என்னுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய வைக்கிறது. - அஜித்குமார் பேட்டி!

Ajithkumar: திரும்பவும் சொல்றேன்.. மதம் மத்தவங்கள வெறுக்க வைக்கும்.. ட்ராவல் பண்ணும் போதுதான் நீங்க யார்னு’ -அஜித்குமார்
துபாயில் நடைபெற்ற துபாய் 24H கார் ரேசில் 991 பிரிவில் 3 ஆவது பரிசை அஜித் வென்றார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், அஜித் மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு கல்ஃப் நியூஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
என்னுடைய குழந்தைகளுக்கு
அந்த பேட்டியில், ‘எனக்கு கார் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும்; கார் ரேஸ் மட்டுமல்ல எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் எனக்கு அது பிடிக்கும். குறிப்பாக, பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. இது என்னை புத்துணர்வாக்கி, உத்வேகப்படுத்தி மீண்டும் என்னுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய வைக்கிறது.