Ajith Speech: ரேஸிங் செய்ய அனுமதித்த ஷாலினிக்கு நன்றிகள்.. இவர்கள் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை - அஜித் எமோஷனல்
Ajith Emotional Speech: இந்த ரேஸிங் செய்ய அனுமதித்த ஷாலினிக்கு நன்றிகள். இவர்கள் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை என தனது அணியினரை பாராட்டி எமோஷனலாக பேசியுள்ளார் அஜித்குமார்.

துபாயில் நடைபெற்ற துபாய் 24H கார் ரேஸ் போட்டியில் அஜித்குமார் ரேஸிங் என்ற தனது அணியுடன் பங்கேற்றார் நடிகர் அஜித்குமார். இந்த போட்டியில் பல்வேறு இடர்பாடுகளை கடந்து அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.
இந்த வெற்றியை இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு கொண்டாடியுள்ளார் அஜித்குமார். அத்துடன் அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதையடுத்து இந்த ரேஸ் நடைபெற்ற துபாய் மற்றும் அபுதாபி யாஸ் மரினா சர்க்குட்டின் தலைமை அதிகாரி இம்ரானுடன், அஜித்குமார் அணியினரின் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது தனது அணியின் ட்ரைவர்களை அருகே நிற்க வைத்து ரேஸில் பெற்ற வெற்றி குறித்தும், தனது அணியின் பங்களிப்பு குறித்தும் எமோஷனலாக பேசினார் அஜித் குமார்.
இந்த ரேஸில் பெற்ற வெற்றி குறித்து அஜித் குமார் பேசியதாவது, "நண்பர்கள், குடும்பத்தினர், என்னுடை பணியாற்றியவர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஒன்றை சொல்லி கொள்கிறேன். இந்த ஹீரோக்கள் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.
வெளிப்படைத்தன்மையுடன் இருந்தார்கள்
ரேஸிங் உலகத்தை பொறுத்தவரை பலரும் உங்களுக்கு உதவ முன் வரமாட்டார்கள். உங்கள் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். அப்படிதான் ரேஸிங்கில் பல ட்ரைவர்கள் தங்களது டேட்டாக்கள், எஞ்ஜினியர்கள் பற்றி பகிர்ந்து கொள்ள மாட்டர்கள். ஆனால் இவர்கள் அப்படியில்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் இருந்தார்கள். எனக்கு தேவையான விஷயங்களை அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். நாங்கள் வெற்றியுடன் இந்த இடத்தில் நிற்பதில் உறுதியாக இருந்தார்கள். எனவே இவர்கள் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை.
ஷாலினிக்கு நன்றிகள்
எனவே டீம் அஜித்குமார் ரேஸிங் அடுதடுத்த ஆண்டுகளில் நடக்கும் ரேஸிங்கிலும் இடம்பெறுவார்கள் என நம்புகிறேன். இங்கு வந்து உங்களது அன்பையும், ஆதரவையும் அளித்த அனைவருக்கும் நன்றிகள். என்னனை ரேஸிங்குக்கு அனுமதித்த ஷாலினிக்கு நன்றிகள்" என்று பேசினார்.
கனவை நிறைவேற்றிய அஜித்
முன்னதாக, துபாய் மற்றும் அபுதாபி யாஸ் மரினா சர்க்குட் தலைமை அதிகாரி இம்ரான், "இந்த 20 ஆண்டுகள் இங்கு ரேஸ் நடக்கிறது. எனது மோட்டர் ஸ்போர்ஸ் அனுபவத்தில் கண்ணீர் வரவழைத்துள்ளார் அஜித் குமார். இந்த டிராக்கில் எனது நாட்டின் கொடியை பார்ப்பதற்கு உயிரை கூட விட தயாராக இருந்தேன். எனது கனவு அஜித் நிறைவேற்றியுள்ளார்.
உண்மையை சொல்வதென்றால் இவர் மிகவும் அன்பானவர். கடந்த மூன்று நாள்களாக இவருடன் நேரத்தை செலவிட்டுள்ளேன். அவரது ஒவ்வொரு ட்ரைவிங்கையும் பார்த்தேன். ஆனால் அவர் இப்போது செய்திருக்கும் விஷயம் அனைத்து இந்தியர்களின் கனவு நிஜமாக்கியதாக உள்ளது. இந்த மாதிரி நேர்மையானவரை ஒரு போதும் இழக்காதீர்கள். நல்ல மனிதர், ஜென்டில்மேன், நல்ல குடும்பஸ்தர், நண்பர்கள். நாம் சாதித்துவிட்டோம்.
இந்தியா சார்பிலான புதிய பிராண்ட் ஆக அஜித்குமார் ரேஸிங் உள்ளது" என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
ஷாலினிக்கு கிஸ் கொடுத்த அஜித்
அஜித்குமார் ரேஸிங் அணி 991 பிரிவில் மூன்றாவது இடத்தையும், GT4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் என்ற விருதையும் பெற்றுள்ளது. ரேஸில் வென்ற பரிசை தனது மகன் ஆத்விக் கையில் கொடுத்து அஜித்குமார் கொண்டாடினார். அத்துடன் ஷாலினிக்கு லிப் கிஸ் கொடுத்தும், மகள் அனோஷ்காவை கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அஜித் குமார் ரேஸ் வெற்றி தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடையை செய்திகள்