அழகு தேவதையாக ஜொலித்த மகள்.. குடும்பத்துடன் பி.வி. சிந்து திருமணம் வரவேற்பில் அஜித்குமார் - புகைப்படம், விடியோ வைரல்
சமீப காலமாக அடிக்கடி பொதுவெளியில் தலை காட்டி வரும் அஜித்குமார், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். இதன் விடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வட்டமடித்து வருகின்றன.

சினிமா நிகழ்ச்சிகள், திரைப்பட புரொமோஷன்கள் போன்றவற்றில் தலை காட்டாத அஜித் பிரபலங்கள் வீட்டு விஷேசங்களில் தவாறாமல் ஆஜர் ஆகும் பழக்கம் கொண்டவராக இருந்து வருகிறார். அந்த வகையில் அஜித்தின் லேட்டஸ்ட் அவுட்டிங்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி உள்ளது.
அஜித் குடும்பத்தினருடன் ஆஜர்
பி.வி. சிந்து - வெங்கட தட்டா சாய் கடந்த 22ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் மணக்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இந்த புதுமண தம்பதிகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். கோலிவுட் சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்து வரும் அஜித்குமார், பி.வி. சிந்து திருமண வரவேற்பில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.