நான் ரொம்ப ரொம்ப கெட்டவன் மாமே… நீங்க கொஞ்சம் ஓரம் போங்க.. குட் பேட் அக்லி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
அஜித்குமார் நடித்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!
நடிகர் அஜித் குமார்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
துணிவு படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், அஜித் குமாரின் அடுத்த படம் மீது மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில், இந்தப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக நடிகர் அஜித் துணிவு படத்திற்குப் பின் கமிட்டான படம், விடாமுயற்சி. இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்த திரிஷா:
இப்படத்தில் நடிகை திரிஷா, ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களுக்குப் பின் நடிகர் அஜித் குமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர்.மகிழ் திருமேனி இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜானில் படமாக்கியுள்ளார்.
விடாமுயற்சி படம் பொங்கல் வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, படத்தின் ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணத்தால், தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டது. படத்தயாரிப்பாளர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்களை ஷாக் ஆக்கியது. அத்துடன் விடாமுயற்சி தள்ளிப்போனதற்கு பலரும் அஜித்தையும், படக்குழுவினரையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
படம் மட்டும் ஹிட் ஆனால்?
இது குறித்து அவர் பேசும் போது, ‘ மகிழ் திருமேனிக்கும், அஜித்திற்கும் இடையே சண்டை; அதனால்தான் படம் தாமதம் ஆகிறது உள்ளிட்ட வதந்திகளுக்கு அஜித் மகிழ்திருமேனியிடம் அஜித் ஒரு விஷயம் சொன்னார். அது என்னவென்றால், படம் மட்டும் ஹிட் அடித்து விட்டால், இதையெல்லாம் பற்றியெல்லாம் யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள்.
ரசிகர்கள் உன்னை பாராட்டுவார்கள்; ஆகையால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், நீ உன்னுடைய வேலையை மட்டும் சிறப்பாக செய். படத்தை முடித்து மக்களிடம் கொடு; அதன் பின்னர் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று கூறியிருக்கிறார்.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்