This Week OTT: வெளியானது விடாமுயற்சி.. காத்திருக்கும் குடும்பஸ்தன்.. இந்த வார ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்..
This Week OTT: இந்த வாரம் ஓடிடி தளங்களில் அஜித்தின் விடாமுயற்சி, மணிகண்டனின் குடும்பஸ்தன் உள்ளிட்ட சில சுவாரஸ்யமான திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

This Week OTT: இந்த வாரம் (மார்ச் 3 முதல் மார்ச் 9 வரை) ஓடிடி தளங்களில் பல்வேறு வகையான திரைப்படங்கள் வெளியாக உள்ளன. சில சுவாரஸ்யமான படங்கள் வெளியாக உள்ளன. தமிழ் ஆக்ஷன் திரைப்படமான விடாமுயற்சி, ஃபேமிலி டிராமாவான குடும்பஸ்தன், தெலுங்கு படமான தண்டேல், மற்றும் மலையாள படம் ஒன்றும் ரிலீஸிற்கு தயாராக உள்ளது. அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
விடாமுயற்சி
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று (மார்ச் 3) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துள்ளது. தமிழுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் பிப்ரவரி 6 ஆம் தேதி இப்படம் வெளியான நிலையில், தெலுங்கில் 'பட்டுதலா' (Pattudala) என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஆங்கில திரைப்படமான பிரேக் டவுண் படத்தின் தழுவலாக இந்தப் படம் வெளியாகி இருப்பினும், கலவையான விமர்சனங்களைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றத்தை அளித்தது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.