Vidaamuyarchi OTT: விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவலால் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi Ott: விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவலால் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்..

Vidaamuyarchi OTT: விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவலால் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்..

Malavica Natarajan HT Tamil
Published Feb 18, 2025 10:27 PM IST

Vidaamuyarchi OTT: நடிகர் அஜித் குமார் - த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Vidaamuyarchi OTT: விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவலால் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்..
Vidaamuyarchi OTT: விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவலால் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்..

விடாமுயற்சி வசூல்

விடாமுயற்சி படம் வெளியாகி 12 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் இந்திய அளவில் 92.97 கோடி ரூபாய் வசூலும், உலக அளவில் 132.97 கோடி ரூபாய் வசூலும் பெற்றுள்ளதாக திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடாமுயற்சி ஓடிடி

தற்போது தியேட்டரில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டர்களில் வசூலைப் பூர்த்தி செய்யவில்லை எனத் தெரிகிறது. இதனால், இந்தப் படம் விரைவிலேயே ஓடிடியில் வெளியாகும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர், இதையடுத்து விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ள நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் படத்தை மார்ச் மாத இறுதியில் ஸ்ட்ரீம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

டிவியில் விடாமுயற்சி

இன்னும் ஓடிடியிலே விடாமுயற்சி படம் வெளியாகாத நிலையில், இந்தப் படம் டிவியில் ஒளிபரப்பு செய்வது குறித்தும் அவர்கள் பேசி வருகின்றனர். நெட்டிசன்களின் கருத்து படி, விடாமுயற்சி திரைப்படத்தின் உரிமையை பெற்றுள்ள சன் டிவி நிறுவனம், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14ம் தேதியே படத்தை டிவியில் திரையிட வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர். ஆனால், ஓடிடி மற்றும் டிவியில் திரையிடுவது குறித்து படக்குழுவினரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

விடாமுயற்சி எப்படி இருக்கு?

துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

மனைவியும் மனக்கசப்பும்

அர்ஜுன் ( அஜித்) பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் கயலுக்கும் ( த்ரிஷா) இடையே நடந்த சந்திப்பு இருவரையும் காதல் கொள்ள வைக்க, ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கயலுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட, அவள் விவாகரத்து முடிவை எடுக்கிறாள்.

அர்ஜுன் எவ்வளவோ முயற்சித்தும், தன்னுடைய முடிவில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் கயல். இந்த நிலையில் இருவரும் கடைசியாக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த பயணத்தில் திரிஷா மிஸ் ஆகிறார். மிஸ் ஆன த்ரிஷாவை அஜித் எப்படி கண்டு பிடித்தார்? அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.