Ajith Kumar: ‘கிரிக்கெட் விளையாட பணம் கம்மியா இருந்தா போதுமா..? என்ன சொல்ல வர்றீங்க; செய்தியாளரை திணற வைத்த அஜித்குமார்
இன்று எல்லோர் வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு மோட்டார் பைக்குகள் இருக்கின்றன. டாடா நிறுவனம் எல்லோர் வீட்டிலும் கார் வாங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கிகொடுத்திருக்கிறது. - அஜித் பேட்டி!

இன்று டாக் ஆஃப் தி டவுண் நடிகர் அஜித்குமார்தான்; காரணம், நேற்று துபாயில் நடந்த துபாய் 24H கார் ரேஸ் போட்டியில், அவர் 3 ஆவது இடத்தை பிடித்தது; விபத்து, பிரேக்டவுன் என எல்லாவற்றையும் தாண்டி அவர் இந்த வெற்றியைப் பெற்றதிற்கு நாலாபுறமும் இருந்து அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கார் ரேஸ் மீது தனக்குள்ள பிரியம் குறித்து பல வருடங்களுக்கு முன்னதாக நடிகர் அஜித் NDTV சேனலுக்கு கொடுத்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.
கார் ரேஸ் ட்ரைவராகதான்
அந்த பேட்டியில் அஜித்திடம் நேர்காணல் எடுத்தவர், நீங்கள் ஒரு மோட்டார் கார் ரேஸ் ட்ரைவராகதான் அறியப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அஜித்குமார், ‘அது உண்மையில்லை; காரணம், எனக்கு கார் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு மோட்டார் தொடர்பான போட்டிகளில் பங்கு பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை; எனக்கு மரியாதையான ரேஸ் கார் ட்ரைவராக இருக்க வேண்டும். அதே சமயம், நான் படங்களிலும் நடிப்பதையும் விரும்பித்தான் செய்கிறேன். நான் அதற்கான கடுமையாக உழைத்து இருக்கிறேன்.
இன்று எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தும் இந்தத்திரைத்துறை எனக்கு கொடுத்ததுதான்; இது எனக்கு சும்மா வந்து விட வில்லை; இந்த இடத்திற்கு வருவதற்கு அவ்வளவு போராடி இருக்கிறேன். நான் கனவு கண்ட வாழ்க்கையை பெற்றதில் நான் அதிர்ஷடசாலியாகதான் உணர்கிறேன். நான் பிரபலமான ஒருவராக இருப்பதால் இது நான் ஈடுபடும் மோட்டார் துறைக்கும் அது பலமாக இருக்கிறது; என்னை பார்ப்பதற்காக நிறைய பேர் ரேஸை பார்ப்பார்கள்.’ என்றார்.
அதிகமான பணம்
தொடர்ந்து அவரிடம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் ஈடுபடுவதற்கு அதிகமான பணம் தேவைப்படுமே என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது, அஜித் தொகுப்பாளரிடம், அப்படியானால் நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு அதிகமான பணம் தேவையில்லையா என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ மோட்டார் துறையை பாருங்கள். இன்று எல்லோர் வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு மோட்டார் பைக்குகள் இருக்கின்றன. டாடா நிறுவனம் எல்லோர் வீட்டிலும் கார் வாங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கிகொடுத்திருக்கிறது. நிறைய பேர் விரும்பி மோட்டார் விளையாட்டுகளை பார்க்கிறார்கள். அதற்காக, பார்ப்பவர்கள் எல்லோரும், அதில் பங்குகொள்ள வேண்டும் என்பதில்லை.’ என்று பேசினார்.
துபாயில் நடைபெற்ற துபாய் 24H கார் ரேஸ் போட்டியில், நடிகர் அஜித் தன்னுடைய அஜித்குமார் ரேஸிங் அணியுடன் பங்கேற்றார். இந்த கார் ரேஸூக்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவரது கார் விபத்தில் சிக்கியது.
3 ஆவது இடம்
இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து வீரராக விலகுவதாகவும், உரிமையாளராக பணியை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அவர் போட்டியில் பங்கேற்றார். 24 மணி நேரமாக நடந்த இந்த ரேஸில், அஜித் அணியின் காரானது பிரேக் டவுனும் ஆனது. இருப்பினும், தொடர்ந்து முன்னேறிய அஜித் அணி, இந்த ரேஸில் 3 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்