Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
Good Bad Ugly First Look: குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் குமார் மாஸ் கூலர் அணிந்து ஸ்டைலாக காணப்படுகிறார்.

Good Bad Ugly First Look: ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ’’குட் பேட் அக்லி’’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில் படக்குழுவினர் சார்பில், குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அஜித்தின் வெவ்வேறு பாணியிலான படங்கள் மூன்று படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நடிகர் அஜித் குமாரில் சட்டை அணிந்து, ஸ்டைலான கூலர் போட்டு, கையில் டாட்டூக்களுடன் மாஸாக உள்ளார்.
குட் பேட் அக்லி படம் தொடர்பாக படக்குழுவினரின் பேட்டி: