Good Bad Ugly: குட் பேட் அக்லி பட ரிலீஸில் பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவமா? வேற லெவல்.. வேற லெவல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Good Bad Ugly: குட் பேட் அக்லி பட ரிலீஸில் பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவமா? வேற லெவல்.. வேற லெவல்..

Good Bad Ugly: குட் பேட் அக்லி பட ரிலீஸில் பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவமா? வேற லெவல்.. வேற லெவல்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 10, 2025 12:42 PM IST

Good Bad Ugly: அஜித்தின் குட் பேட் அக்லி படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸான நிலையில், பெண்களுக்காக முதல் காட்சியை திரையிட்டுள்ளது ஒரு தியேட்டர்.

Good Bad Ugly: குட் பேட் அக்லி பட ரிலீஸில் பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவமா? வேற லெவல்.. வேற லெவல்..
Good Bad Ugly: குட் பேட் அக்லி பட ரிலீஸில் பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவமா? வேற லெவல்.. வேற லெவல்..

பெண்களுக்காக மட்டும்..

நிலைமை இப்படி இருக்க, ஈரோட்டை சேர்ந்த ஒரு திரையரங்கம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பெண்களுக்காக மட்டுமே திரையிட்டுள்ளது . இது அஜித் ரசிகர்கள் மற்றும் ரசிகைகளின் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

என்ஜாய் செய்த ரசிகைகள்

அஜித் ரசிகைகளுக்காகவே பிரத்யேகமாக டிக்கெட் புக்கிங் செய்து அவர்களுக்காகவே சிறப்பு காட்சிகளை திரையிட்டுள்ளது ஸ்ரீசக்தி சினிமாஸ். இந்த தியேட்டரில் இந்த சிறப்பு திரையிடலுக்கான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே அறிவித்திருந்தது. இதையடுத்து, அஜித் ரசிகைகள் ஆவலாக டிக்கெட் புக் செய்து, குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.

படம் திரையிடப்பட்ட சமயத்தில் அஜித்திற்காக கத்தி கொண்டாடி, விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை கேட்ட பலரும் இந்த ஐடியாவை பாராட்டினர்.

ரெட் டிராகன் அஜித்

ரெட் டிராகன் என்ற முன்னாள் கும்பல் தலைவனாக குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். தனது மகன் கடத்தப்பட்டு ஆபத்தில் இருப்பதால், மீண்டும் அந்த கும்பலின் தலைவனாக மாறுகிறான் என்பதை படத்தின் டிரெயிலர் மூலம் தெரிய வருகிறது. இந்தப் படத்தின் ட்ரெயிலரிலேயே வின்டேஜ் அஜித், சண்டைக் காட்சிக்கு பின் ஒலிக்கும் பாடல் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபு, அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராஃப், பிரசன்னா ராகுல் தேவ், ஊஷா உதப், ரெடின் கிங்ஸ்லி, ரோடிஸ் ரகு, பிரதீப் காப்ரா, ஹாரி ஜோஷ், கேஜிஎஃப் அவினாஷ், சுனில், ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விடாமுயற்சி ஏமாற்றத்திற்குப் பிறகு..

அஜித் நாயகனாக நடித்த ஆக்‌ஷன் த்ரில்லர் படம் விடாமுயற்சி இந்த ஆண்டு பிப்ரவரி 6 அன்று வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றத்தை அளித்தது. அந்தப் படம் தோல்வியடைந்தாலும், 'குட் பேட் அக்லி' படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது.

ஃபேன் பாய் சம்பவத்திற்கு வெயிட்டிங்

அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன் ஏர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நாளை ஏப்ரல் 10 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் அஜித் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.