AjithKumar: வாழ்க்கை ரொம்ப சின்னது.. எனது கொள்ளுத்தாத்தாவின் பெயர் தெரியாது.. என்னையும் மறந்திடுவாங்க.. அஜித் எமோஷனல்
AjithKumar: வாழ்க்கை ரொம்ப சின்னது.. எனது கொள்ளுத்தாத்தாவின் பெயர் தெரியாது.. என்னையும் மறந்திடுவாங்க.. அஜித் எமோஷனல் பேட்டியளித்துள்ளார்.

AjithKumar: வாழ்க்கை ரொம்ப சின்னது.. எனது கொள்ளுத்தாத்தாவின் பெயர் தெரியாது.. என்னையும் மறந்திடுவாங்க.. அஜித் எமோஷனல் ஆகப் பேட்டியளித்துள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் அணி துபாய்யில் நடந்த கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதன்பின் நடிகர் அஜித் குமார் அளித்த முழுமையான பேட்டியில், ‘’ நான் எல்லோருக்கும் நன்றி தெரிவிச்சுக்கிறேன். ஷாலினிக்கு, என்னுடைய குழந்தைகளுக்கு, என் சகோதரர்களுக்கு துபாயில் இருக்கக் காரணமான அனைவருக்கும் நன்றி. துபாய் எனது இரண்டாவது தாய்வீடுபோல். ஷாலினி எனக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். என்னுடைய அணியினருக்கு நன்றி.
என்னை வழிநடத்திய பாபியான், மேத்யூவுக்கு நன்றி. 27 வயது எனது நண்பன் சிவா சுவாமிநாதன், அவர் எனது மோட்டார் சைக்கிள் பயண கம்பெனியைப் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு எனது நன்றி.
பாபியான், டீம் மேனேஜர், டீம் டிரைவர். எல்லோரும் பக்கபலமாக இருந்தார்கள். மக்கள், அரசிடம் இருந்து ஆதரவு எனக்கு கிடைத்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவியது. சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேஸிங் நடைபெற்றது. அதுவும் இரவுநேரப் போட்டியாக நடந்தது. அதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் சார், உதயநிதி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி. இந்த விஷயங்கள் இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறது.
நரேன் கார்த்திகேயனை நினைத்த அஜித்!
கார் ரேஸில் நான் மட்டும் கிரெடிட் எடுக்க விரும்பவில்லை. உலகளவில் இந்தியாவுக்காக கார் ரேஸில் பங்கெடுக்கும் நரேன் கார்த்திகேயன், கருண் சாந்தோக், ஜஹாங்கர் இது எல்லாருக்குமானது. மன்னிக்கனும், நான் சில பேர் பெயரை சொல்ல மறந்துட்டேன்.
கார் ரேஸில் என்னை வழிநடத்திய சகோதர்களான பேசின், எலே அவர்களுக்கும் நன்றிதெரிவிச்சுக்கிறேன். அவர்களுடைய அப்பா. அவருக்கு 87 வயது. இருந்தாலும் ஐரோப்பியாவில் இந்த வயதில் டிரக் ஓட்டக்கூடியவர். அவங்க குடும்பமே மோட்டாரில் அவ்வளவு ஆர்வமாக இருப்பாங்க. மக்கள் இதைப் பத்தி தெரிஞ்சுக்கணும் என்று நினைக்கிறேன்.
நான் பள்ளிப்படிப்பை முழுவதும் முடிக்காதவன். அடுத்து ஆட்டோ மொபைல் கம்பெனியில் நான் வேலைசெய்திருக்கிறேன். அடுத்து வணிகராக மாறினேன். அதனால் நிஜ உலகத்தைப் பற்றி நிறைய கற்றிருக்கிறேன்.
எனக்கு விளையாட்டினை அறிமுகப்படுத்தியதே எனது அப்பா தான். அவர் இறந்துவிட்டார். எனது சிறுவயதில் அப்பாவின் நண்பர் விமல் ஷா அங்கிள் ரேஸராக இருந்தார். நாங்கள் வசித்த பகுதியில் வீட்டின் கீழே வாகன சர்வீஸ் சென்ட்டர்கள் இருந்தன. அதெல்லாம் என்னைக் கவர்ந்தது. அப்படி தான், ரேஸிங் எனது மனதுக்குள் வந்தது. அப்போது எனக்கு 18 வயது. இப்போது எனக்கு வயது 53. எனது கனவு நிஜமாகிவிட்டது.
சின்ஸியராக இருங்க - அஜித்
நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். நான் ஒரு விஷயத்தை மக்களிடம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நீங்க என்ன ஆசைப்பட்டு அதற்காக சின்ஸியராக இருக்கீங்களோ, சில நேரம் அதில் நமக்கு கடை இடம் கூட கிடைக்கலாம். நீங்கள் முன்னால் செல்லவும் வாய்ப்புகிட்டும்.
மக்கள் தனது பணியை சரிவர செய்தால் வாழ்க்கையில் கிடைக்கவேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். வாழ்க்கை ரொம்ப சின்னது. எனது ரசிகர்கள் என்மீது கணக்கில்லாத அன்பு செலுத்துகிறார்கள். இணைய உலகம் மிக நச்சுவாய்ந்ததாக இருக்கிறது. எனது என் கொள்ளு தாத்தாவின் பெயர்கள் தெரியாது. நான் நடிகராக இருப்பதால் ஒருவேளை இரண்டு தலைமுறைகள் கழித்தும் என்னைத் தெரியலாம். அடுத்து மறந்திடுவாங்க. எதையும் சீரியஸாக எடுக்காதீங்க. உபதேசமாக கருதாதீங்க. வாழ்க்கை ரொம்ப சின்னது. அந்தப் பயணத்தை நல்ல படியாக செய்யுங்க’’ என்று அஜித் கூறியிருக்கிறார்.
நன்றி: மஞ்சு ரமணன் யூட்யூப் சேனல்

டாபிக்ஸ்