தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?.. பொங்கலும் நமக்குதான், தீபாவளியும் நமக்குதான்.. விடாமுயற்சி அப்டேட்!

Ajith Kumar: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?.. பொங்கலும் நமக்குதான், தீபாவளியும் நமக்குதான்.. விடாமுயற்சி அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 19, 2024 05:30 PM IST

Ajith Kumar: “விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான வீடியோவை வெளியிட்ட அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, படத்தை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கும் போது, படம் குறித்தான தவறான தகவல்கள் படக்குழுவை வருத்தமடைய செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.” - விடாமுயற்சி அப்டேட்!

Ajith Kumar: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?..  பொங்கலும் நமக்குதான், தீபாவளியும் நமக்குதான்.. விடாமுயற்சி அப்டேட்!
Ajith Kumar: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?.. பொங்கலும் நமக்குதான், தீபாவளியும் நமக்குதான்.. விடாமுயற்சி அப்டேட்!

நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தத்திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கினார். பொங்கல் பரிசாக வெளியான இந்தத்திரைப்படம் வெற்றி பெற்றது. இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள், விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது. 

உள்ளே வந்த மகிழ்திருமேனி 

இந்த நிலையில்தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார். அதன் பின்னர் அந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனாலும், அதற்கடுத்ததாக, அந்தப்படம் குறித்த எந்தத்தகவலும் வெளியாக வில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அந்தப்படத்தின் அப்டேட் குறித்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் படக்குழு அதனை கண்டுகொள்ளவே இல்லை. 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.