தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidamuyarchi: ‘அசல் அஜித்தின் இரண்டு அச்சுகள்' .. மகிழ்ச்சியை தருவாரா மகிழ்? விடாமுயற்சி அப்டேட்!

Vidamuyarchi: ‘அசல் அஜித்தின் இரண்டு அச்சுகள்' .. மகிழ்ச்சியை தருவாரா மகிழ்? விடாமுயற்சி அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 07, 2024 08:40 PM IST

Vidamuyarchi: அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது - விடாமுயற்சி அப்டேட்!

அசல் அஜித்தின் இரண்டு அச்சுகள் ' - விடாமுயற்சி அப்டேட்!
அசல் அஜித்தின் இரண்டு அச்சுகள் ' - விடாமுயற்சி அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு புகைப்படத்தில் காரில் அஜித் வேகமாக செல்வதும், இன்னொரு புகைப்படத்தில் அஜித் இதயத்தில் கை வைத்து நிற்பதும் இடம் பெற்று இருக்கிறது. அந்த இரண்டு புகைப்படங்களிலுமே முயற்சி திருவினையாக்கும் என்ற வாசகம் இடம் பெற்று இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, படக்குழு சார்பில் இருந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் படக்குழு தற்போது இரண்டாவது லுக்கை வெளியிட்டு இருக்கிறது.

முன்னதாக, விடாமுயற்சி படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளிவராத நிலையில், அந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் லீக் புகைப்படங்கள், அஜித்தின் லுக் போன்ற எந்த வீடியோக்கள் வந்தாலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வந்தார்கள். அதற்கான காரணம், விடாமுயற்சி அப்டே ட்டை எதிர்பார்த்து காத்திருந்தது, காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததுதான்.

நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தத்திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கினார். பொங்கல் பரிசாக வெளியான இந்தத்திரைப்படம் வெற்றி பெற்றது. இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள், விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது.

உள்ளே வந்த மகிழ்திருமேனி

இந்த நிலையில்தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார். அதன் பின்னர் அந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனாலும், அதற்கடுத்ததாக, அந்தப்படம் குறித்த எந்தத்தகவலும் வெளியாக வில்லை. 

இந்த நிலையில், விடாமுயற்சி கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான வீடியோவை வெளியிட்ட அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, படத்தை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கும் போது, படம் குறித்தான தவறான தகவல்கள் படக்குழுவை வருத்தமடைய செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

விடாமுயற்சி ரிலீஸ் எப்போது?

அண்மையில் மீண்டும் விடாமுயற்சி தொடர்பான சில தகவல்கள் சமூகவலைதளங்களில் சலசலத்தன. அதில் விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம், தான் தயாரித்த லால் சலாம் படம் தோல்வி அடைந்த காரணத்தினால், பண நெருக்கடியை சந்தித்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தள்ளிப்போடுவதாகவும், படப்பிடிப்பை நடத்த அந்த நிறுவனம் சரிவர ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சுரேஷ் சந்திரா, விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறியதாக தகவல் வெளியானது

இதற்கு நடுவில், குட் பேடு அக்லி படத்தில் கமிட் ஆனார் அஜித்குமார். இந்தப்படத்தை அஜித்தின் ரசிகரும், மார்க் ஆண்டனி படம் மூலமாக 100 கோடி வசூலித்து கொடுத்த இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது.

ஆதிக் ரவிச்சந்திரனின் பதிவு

அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆதிக், “ உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டைக்கண்டு வியக்கிறேன். எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். லவ் யூ மை சார்” என்று பதிவிட்டு இருந்தார். இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.