PrashanthNeel: விடாமுயற்சி பிரேக்கில் சந்திப்பு.. 3 வருட கால்ஷீட்..கே.ஜி.எஃப் டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்!
PrashanthNeel: அஜித் மற்றும் யாஷ் தொடர்பான காட்சிகள் இடம் பெறும். இந்தப்படங்களை முன்னதாக கே.ஜி.எப், காந்தாரா, சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது - டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்!

PrashanthNeel: கே.ஜி.எஃப், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்தான செய்தியை, தினத்தந்தி குழுமத்தின் ஆங்கில பிரிவான டிடி நெக்ஸ்ட் வெளியிட்டு இருக்கிறது.
அஜித்துடன் இணையும் பிரசாந்த் நீல்
அது தொடர்பாக வெளியான செய்தியில், “சலார் படத்தின் பாகங்களை முடித்த பின்னர், பிரசாந்த் நீல் அஜித்துடன் இரு திரைப்படங்களில் இணைய இருக்கிறார். இது அஜித்தின் 64 மற்றும் 65 படங்களாகவோ அல்லது 65 மற்றும் 66 ஆவது படங்களாகவோ இருக்கலாம்.
அஜித்தும், இயக்குநர் பிரசாந்த் நீலும் கடந்த மாதம், விடாமுயற்சி படப்பிடிப்பின் பிரேக்கில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது பிரசாந்த், அஜித்தின் 3 வருடத்திற்கான கால் சீட்டுகளை கேட்டு இருக்கிறார். அவர்கள் இருவரும் இணையும் முதல் படமாக இருக்கும் அந்தப்படமானது, அஜித்தின் 64 வது படமாக இருக்கலாம். இது பிரசாந்த் நீலின் முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், தனித்திரைப்படமாக இருக்கும். இந்தப்படத்திற்காக 2025ம் ஆண்டு படப்பிடிப்பிற்கு செல்லும் படக்குழு, 2026ம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.
