Ajith Kumar: ‘அஜித்தும் பிரசாந்தும் சந்தித்தது உண்மைதான்.. ஆனால்’ - கூட்டணி குறித்த உண்மையை உடைத்த அஜித் மேனஜர்!
Ajith Kumar: “அஜித் சாரும், பிரசாந்த் நீலும் சந்தித்தது உண்மைதான். பிரசாந்துடன், அஜித்தை பார்ப்பதற்கு எனக்கும் விருப்பம்தான். ஆனால்,” - கூட்டணி குறித்த உண்மையை உடைத்த அஜித் மேனஜர்!

PrashanthNeel: கே.ஜி.எஃப், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துடன் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. இதனை தற்போது அஜித்தின் மேனஜரான சுரேஷ் சந்திரா மறுத்திருக்கிறார்.
அஜித் சாரும், பிரசாந்த் நீலும் சந்தித்தது உண்மைதான்.
இது குறித்து அவர் பேசும் போது "அஜித்தும், பிரசாந்த் நீலும் இணைவதாக கூறி சில வதந்திகள் ஆன்லைனில் வந்துள்ளன. அது உண்மையல்ல. அஜித் சாரும், பிரசாந்த் நீலும் சந்தித்தது உண்மைதான். அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். இருவருமே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றனர்.
அவர்கள் சந்தித்தபோது எந்த படம் குறித்தும் விவாதிக்கப்படவில்லை. பிரசாந்துடன், அஜித்தை பார்ப்பதற்கு எனக்கும் விருப்பம்தான். ஆனால், எதிர்காலத்தில் அது போன்ற ஒன்று நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை” என்று கூறினார்.