Good Bad Ugly Review: தமிழ்நாடு தியேட்டர் எல்லாம் என்ன ஆக போகுதோ? குட் பேட் அக்லிக்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்..
Good Bad Ugly Review: குட் பேட் அக்லி படம் வெளிநாடுகளில் எல்லாம் ரிலீஸ் ஆன நிலையில், அங்கு படம் பார்த்த ரசிகர்கள், விமர்சகர்கள் அஜித்தையும் ஆதிக் ரவிச்சந்திரனையும் கொண்டாடி வருகின்றனர்.

Good Bad Ugly Review: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், வெளிநாடுகளில் எல்லாம் படம் திரையிட தொடங்கிவிட்டன. இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்த்து வந்த ரசிகர்கள் பெரும்பாலானோர் அஜித்தை பற்றியும் ஆதிக் ரவிச்சந்திரன் பற்றியும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொண்டி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பின் ஒரு அஜித் ரசிகனுக்கு நல்ல விருந்து கிடைத்திருப்பதாகவும், படத்தை தியேட்டரில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டும் எனவும் மாறி மாறி கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குட் பேட் அக்லி- வெங்கி ரிவ்யூஸ்
குட் பேட் அக்லி படம் ஒரு அவுட் அண்ட் அவுட் மாஸ் என்டர்டெயினர் படம். இது பார்ட் பார்ட்டாக வேலை செய்கிறது. இந்தப் படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.
முதல் பாதியில் ஒரு திடமான கதை இருந்தது. பின் இரண்டாம் பாதி ஒரு ஃப்ளாஷ்பேக் எபிசோடுடன் நன்றாகத் தொடங்குகிறது. இந்தக் காட்சிகள் நீளமாக செல்வதால் அளுப்பை தட்டலாம். இருந்தாலும் சில மாஸ் சீன்கள் மிகவும் நன்றாக வந்துள்ளன. அஜித்தை ஒரு விண்டேஜ் அஜித்தாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.