Ajith Kumar: மீண்டும் மேடை.. மீண்டும் வெற்றி.. ஆச்சரியத்தில் கோலிவுட்!- 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார்!
Ajith Kumar: துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸ் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இந்த நிலையில், இந்தக்குழு இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றது.

Ajith Kumar: மீண்டும் மேடை.. மீண்டும் வெற்றி.. ஆச்சரியத்தில் கோலிவுட்! - 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார்!
Ajith Kumar: நடிகர் அஜித்குமாருக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் இவருக்கு, கார் ரேஸ் என்றால் கொள்ளை பிரியம். முன்னதாக கார் ரேஸில் ஏற்பட்ட விபத்து, சினிமா கமிட்மெண்ட்கள் உள்ளிட்டவை காரணமாக கிட்டத்தட்ட 15 வருடங்கள் கார் ரேஸில் இருந்து ஒதுங்கி இருந்த அஜித்குமார் தற்போது கார் ரேஸ் போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்று வருகிறார்.
மீண்டும் வாகை சூடிய அஜித்
இதற்காக அஜித்குமார் கார் ரேசிங் என்ற பெயரில் ஒரு கார் ரேஸ் குழுவையும் உருவாக்கினார். இந்தக்குழு பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. முன்னதாக துபாய், பார்சிலோனா, போர்ச்சுக்கல், பிரான்ஸ் நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளில் இந்த அணி பங்கேற்றது.
