Ajith Kumar:தன்னம்பிக்கையில் வென்ற தாரம்.. உதட்டில் முத்தம் வைத்த ஷாலினி..மகிழ்ச்சியில் பொங்கிய அஜித்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar:தன்னம்பிக்கையில் வென்ற தாரம்.. உதட்டில் முத்தம் வைத்த ஷாலினி..மகிழ்ச்சியில் பொங்கிய அஜித்!

Ajith Kumar:தன்னம்பிக்கையில் வென்ற தாரம்.. உதட்டில் முத்தம் வைத்த ஷாலினி..மகிழ்ச்சியில் பொங்கிய அஜித்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 12, 2025 04:59 PM IST

Ajith Kumar:துபாயில் நடைபெற்ற ரேஸில் 3 ஆவது இடத்தை பிடித்த அஜித் தன்னுடைய மனைவியான ஷாலினிக்கு உதட்டில் முத்தம் கொடுத்து வெற்றியைக் கொண்டாடினார்.

Ajith Kumar:தன்னம்பிக்கையில் வென்ற தாரம்.. உதட்டில் முத்தம் வைத்த ஷாலினி..மகிழ்ச்சியில் பொங்கிய அஜித்!
Ajith Kumar:தன்னம்பிக்கையில் வென்ற தாரம்.. உதட்டில் முத்தம் வைத்த ஷாலினி..மகிழ்ச்சியில் பொங்கிய அஜித்!

3 ஆவது இடம்

இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து வீரராக விலகுவதாகவும், உரிமையாளராக பணியை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டது. 24 மணி நேரமாக நடந்த இந்த ரேஸில், அஜித் அணியின் காரானது பிரேக் டவுனும் ஆனது. இருப்பினும், தொடர்ந்து முன்னேறிய அஜித் அணி, இந்த ரேஸில் 3 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.

ஆம், 991 பிரிவில் 3 ஆவது இடத்தையும், GT4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் என்ற விருதையும் பெற்று இருக்கிறது. இந்த வெற்றியை அஜித் தேசிய கொடியை ஏந்தி கொண்டாடி வருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித் ரேஸில் தான் வென்ற 3 வது பரிசை, மகன் ஆத்விக் கையில் கொடுத்து வெற்றியை கொண்டாடினார். அத்துடன் தன்னுடைய மனைவியான ஷாலினிக்கு உதட்டில் முத்தம் கொடுத்தும், மகள் அனோஷ்காவை கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியைக்கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

நன்றாக படியுங்கள்

அதில் அவர் பேசும் போது, ‘என்னுடைய மோட்டார் மீதான ஆர்வம் சிறுவயதில் ஆரம்பித்து இருந்தது. நிறைய ரசிகர்கள் என்னை தேடி இங்கு வந்திருந்தார்கள். எனக்கு மிகவும் எமோஷனலாக இருந்தது. நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக, மன நிம்மதியோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு நான் அந்த கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்களது குடும்பத்தை பாருங்கள். உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்; நன்றாக படியுங்கள்; உழைக்கிறவர்கள் நன்றாக உழையுங்கள்

கடுமையாக உழையுங்கள்; கடுமையாக விளையாடுங்கள். நாம் நமக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடும் பொழுது, அதில் ஜெயிப்பது என்பது நல்ல விஷயம் தான். ஒரு வேளை நீங்கள் அதில் ஜெயிக்கவில்லை என்றால், சோர்ந்து போக வேண்டாம் போட்டி என்பது மிக மிக முக்கியம். தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பை என்றுமே விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களை நான் அளவு கடந்து நேசிக்கிறேன்.

கார் ரேஸ் குறித்து

இந்த ரேஸானது பிற போட்டிகள் போல கிடையாது. பிற ரேஸ் போட்டிகளில் ஒரு டிரைவர், ஒரு கார் இருக்கும். ஆனால் இந்த விளையாட்டில், நான்கு பேரும் அந்த போட்டிக்கு பொறுப்பாவர். வாகனத்தை நாம் பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்; அதே நேரத்தில் குறைந்த நேரத்திலும் போட்டி போட வேண்டும். இறுதியாக இதற்கும் ஒரு கூட்டு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இதுவும் சினிமா துறையை போலத்தான். அவரவர்கள் அவர்களது கடமையை சரியாக செய்தாலே போதும் ரிசல்ட் தானாக வந்துவிடும். தயவுசெய்து சண்டை போட வேண்டாம். உங்களது குடும்பத்தை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்' என்று பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.