தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ajith Hates Self Glorification Says H.vinoth

Thunivu: அஜித்திற்கு அது பிடிக்காது… ஹெச்.வினோத்

Aarthi V HT Tamil
Dec 06, 2022 10:30 AM IST

நடிகர் அஜித்திற்கு தன்னை மிகைப்படுத்தி பேசினால் பிடிக்காது என இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.

துணிவு படத்தில் அஜித்
துணிவு படத்தில் அஜித்

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படம் பொங்கல் பண்டிகைக்கு  திரையில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு விளம்பர பணியில் ஈடுபட்டு வருகிறது.

இப்படம் குறித்து சமீபத்தில் பல விஷயங்களை இயக்குநர் ஹெச். வினோத் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அஜித் குறித்து பேசிய ஹெச்.வினோத், "துணிவு படத்தில் ஒரு பாட்டு செல்ஃப் குளோரிஃபிகேஷனா (தன்னை மிகைப்படுத்தி பேசுதல்) இருக்கு என சொல்லி அஜித் அந்த வரிகளை மாற்ற சொன்னார். 

அது ஹீரோ பாத்திரத்தோட வேல்யூவை சொல்கிற வரி என சொல்லி அவரை சமாதானப்படுத்தினேன். அது பெரிய போராட்டமாக இருந்தது. படத்தின் தலைப்பில் கூட வீரன் என்பதற்கு பதிலாக வீரம் என வைக்க சொன்னவர் அஜித் தான்.

மற்ற விஷயங்களில் அவர் தலையிடவே மாட்டார். முதலில் பொதுவான சந்திப்பு நடக்கும். பிறகு ஒன் லைன் கேட்பார். கால் மணி நேரம் டிரெய்ல்ட்டாக சொல்ல வேண்டும். 

படத்தில் நடிப்பது யார் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். சர்ச்சையான ஆட்கள் இல்லாதது போல் பார்த்து கொள்ள வேண்டும்” என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்