Dheena ReRelease Parithabangal: விஜய் ரசிகர்களிடம் நேருக்குநேர்..கில்லி பேனர் கிழிப்பு.. உரண்டு இழுத்த தீனா அஜித் பாய்ஸ்
Dheena ReRelease Parithabangal: மாஸாக மீண்டும் வெளியான தீனா; கில்லி ரசிகர்களை உரண்டு இழுத்த தீனா பாய்ஸ்
Dheena ReRelease Parithabangal: நடிகர் அஜித் குமார் நடித்த தீனா திரைப்படம்,அவரது பிறந்தநாளை ஒட்டி, சென்னை காசி திரையரங்கில் வெளியானபோது, அஜித் ரசிகர்கள், விஜய்யின் கில்லி பட பேனரை கிழித்து அட்ராசிட்டி செய்தனர்.
மக்களவைத் தேர்தல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருவதால், வாக்கு எண்ணிக்கை முடியும் ஜூன் 4ஆம் தேதி வரை, புதுப்படங்களை குறைவாகவே வெளியிட பலத் தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர்.
இந்த இடைவெளியைப் பயன்படுத்தி புகுந்த மலையாளத் திரைப்படங்களான மஞ்ஞுமல் பாய்ஸூம் பிரேமலுவும் டப் கூட செய்யாமல், தமிழ்நாட்டில் நேரடியாக ரிலீஸாகி, பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்தது.
மேலும் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட, சில ஹிட் படங்களை எடுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பழைய படங்களை தமிழ்நாட்டில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம், தற்போது ரீ-ரிலீஸ் ஆகி பத்து கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்ஷனைப் பெற்றுள்ளது.
அப்போது பலரும் அஜித்தின் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் இணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். அந்த வகையில் அஜித் நடித்து வெளியான தீனா திரைப்படம், அஜித்தின் பிறந்தநாளான மே1ஆம் தேதியை ஒட்டி, மீண்டும் ரிலீஸானது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து, 2001ஆம் ஆண்டு, ஜனவரி 14ஆம் தேதி பொங்கலுக்கு வெளியான திரைப்படம், தீனா. இப்படத்தில் அஜித் குமாருடன் சேர்த்து, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் நடித்து இருந்தனர். இது ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படம் ஆகும்.
இப்படத்துக்குண்டான பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா செய்திருந்தார். பாடல்களும் செம ஹிட்டானது. இப்படத்துக்குண்டான ஆக்ஷன்மோட் ஒளிப்பதிவினை அரவிந்த் கமலநாதன் மேற்கொண்டிருந்தார். இப்படத்தில் தான் முதன்முதலாக, ‘தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது’ என்னும் வசனத்தை ஸ்டன்ட்மேன் மகாநதி ஷங்கர் பேசியிருப்பார். அன்று முதல் பல ஆண்டுகளாக, ‘’தல'' என ரசிகர்களால் செல்லப்பெயருடன் அழைக்கப்பட்டார், அஜித்.
ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின், அந்தப் பெயரை சொல்லி அழைக்கக் கூடாது என்று ரசிகர்களுக்கு அன்புக்கட்டளையிட்டார், அஜித். மேலும் தன்னை அஜித் என்றும்; ஏ.கே. என்றும் அழைத்தால் போதும் என அறிக்கை விட்டார். அதன்பின் அஜித் ரசிகர்கள், அதனைப் பின்பற்றத் தொடங்கினர்.
இந்நிலையில் ‘தீனா’திரைப்படம் வெளியாகி 23 வருடங்களுக்குப் பின், அஜித் குமாரின் பிறந்தநாளான மே1ஆம் தேதியை ஒட்டி, தயாரிப்பு நிறுவனம் விஜயம் சினி கம்பைன்ஸ் ரீ-ரிலீஸ் செய்துள்ளது.
சென்னை ஜாஃபர்கான்பேட்டை காசி திரையரங்கில் தீனா ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தின்போது கில்லி திரைப்பட பேனரை அஜித் ரசிகர்கள் கிழித்தனர். மேலும், கில்லி திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கின் கதவைத் திறந்து கூச்சலிட்டனர். அதுமட்டுமின்றி, காசி திரையரங்குங்கு முன்பு கூடி, சென்னையின் முக்கிய சாலையை அஜித் ரசிகர்கள் சூழ்ந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதற்காக இப்படம் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் வெளிவந்துள்ளது. இப்படத்துக்குண்டான திரையரங்க ரிலீஸை, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீ லாவண்யா ஃபிலிம்ஸ் மேற்கொண்டுள்ளது.
அதேபோல், அஜித் குமார் நடித்து வெளியான பில்லா திரைப்படமும், மங்காத்தா திரைப்படமும் மே.1ஆம் தேதியான இன்று ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
’சென்னை 28’ படத்தை பார்த்து இம்ரஸ் ஆன அஜித் குமார், ’’ஜி’’ படத்தில் தன்னோடு நடித்த வெங்கட் பிரபுவுக்கு கொடுத்த வாய்ப்புதான் ‘மங்கத்தா’, இப்படம் அஜித்தின் 50ஆவது படமாக ரிலீஸாகி மாஸ் மற்றும் கிளாஸ் ஆடியன்ஸை வெகுவாகக் கவர்ந்தது.
அதேபோல், 2007ஆம் ஆண்டு, இயக்குநர் விஷ்ணு வர்தனின் இயக்கத்தில் அஜித்தை மிக ஸ்டைலிஷாக காட்டி உருவான படம் தான், பில்லா. இப்படமும் அஜித்துக்கு மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்