Happy Birthday AK:கொண்டாட்டம் நான் இப்படியா.. எல்லை மீறி அஜித் ரசிகர்கள் செய்த செயல்
Dheena Re Release: தீனா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் படம் ஓடும் போது ரசிகர்கள் பட்டாசுகளை கொண்டு வந்து வெடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் அஜித் குமார் நடித்த தீனா திரைப்படம், அவரது பிறந்தநாளை ஒட்டி, தமிழ் நாட்டில் இன்று ( மே 1 ) ரீ- ரிலீஸாகி இருக்கிறது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து, 2001 ஆம் ஆண்டு, ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தீனா. இந்த படத்தில் அஜித் குமாருடன் சேர்த்து, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் நடித்து இருந்தனர். இது ஏ. ஆர். முருகதாஸின் முதல் படம் ஆகும்.
ஆம். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் முதல் படமாக ஜனவரி 14 ஆம் தேதி பொங்கலை ஒட்டி, 2001ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தில் அஜித் குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.