அசுரவேகம்.. முட்டி மோதிய அஜித்குமார்.. அப்பளமான கார்.. எப்படி இருக்கிறார் ஏகே..? - சக ரேசர் கொடுத்த அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அசுரவேகம்.. முட்டி மோதிய அஜித்குமார்.. அப்பளமான கார்.. எப்படி இருக்கிறார் ஏகே..? - சக ரேசர் கொடுத்த அப்டேட்!

அசுரவேகம்.. முட்டி மோதிய அஜித்குமார்.. அப்பளமான கார்.. எப்படி இருக்கிறார் ஏகே..? - சக ரேசர் கொடுத்த அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 07, 2025 09:48 PM IST

அஜித்தின் கார் விபத்துக்குள்ளான நிலையில், அவரது குழுவில் இருக்கும் ஃபேபியன் டஃபியக்ஸ் அஜித் தொடர்பான புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார்.

அசுரவேகம்.. முட்டி மோதிய அஜித்குமார்.. அப்பளமான கார்.. எப்படி இருக்கிறார் ஏகே..? - சக ரேசர் கொடுத்த அப்டேட்!
அசுரவேகம்.. முட்டி மோதிய அஜித்குமார்.. அப்பளமான கார்.. எப்படி இருக்கிறார் ஏகே..? - சக ரேசர் கொடுத்த அப்டேட்!

இந்த நிலையில் அவரது கார் ரேஸ் குழுவில் இருக்கும் ஃபேபியன் டஃபியக்ஸ் அஜித் மற்றும் அவரது கார் தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அவர் பகிர்ந்த புகைப்படங்கள்
அவர் பகிர்ந்த புகைப்படங்கள்

 

இயல்பிலேயே, மோட்டார் ரேசிங்கின் மீது ஆர்வம் கொண்ட அஜித்குமார், அஜித் குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை தொடங்கி அதற்கான குழுவை உருவாக்கினார். இந்தக்குழு துபாயில் நடக்கும் 24H Dubai 2025 ரேசிங்கில் பங்கேற்க இருக்கிறது. இந்த நிலையில், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதுதான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. 

சிங்கப்பூரில் மகள் பிறந்தநாள் 

அஜித் அண்மையில் தன்னுடைய குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகளின் பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படத்தை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். கடந்த ஜனவரி 5ம் தேதி சென்னை திரும்பிய அவர்களில் அஜித் மட்டும் ரேசில் பங்குகொள்ள துபாய் சென்றார். அது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

முன்னதாக, அஜித் துணிவு படத்திற்குப் பின் கமிட்டான படம், விடாமுயற்சி. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப்படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அனிருத் இசையில் வெளியான சவாதீகா பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்த திரிஷா:

இப்படத்தில் நடிகை திரிஷா, ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களுக்குப் பின் நடிகர் அஜித் குமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜானில் படமாக்கியுள்ளார்.

ஏப்ரல் 10 ரிலீஸ் 

இதற்கிடையே, நடிகர் அஜித் குமார்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் அஜித்துடன் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தப்படம் ஏப்ரல் 10 அன்று வெளியாக இருக்கிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.