தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ajith Angry And Brave Speech In Paasa Thalaivanukku Parattu Vizha Karunanidhi Function What Is Real Truth Behind This

Ajith Kumar: ‘அஜித்திற்கு 4 ம் வரிசையில் சீட்; ஷாலினிக்கு சீட்டே.. மிரட்டல் வேறு.. வரலாற்று சம்பவத்தின் இன்னொரு பக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 08, 2024 06:57 AM IST

அவர் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்தபோது, அவருக்கு கலைஞர் உட்கார்ந்த இடத்திலிருந்து நான்காவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஷாலினிக்கு இருக்கையே இல்லை. இதைப் பார்த்து அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

நடிகர் அஜித்!
நடிகர் அஜித்!

ட்ரெண்டிங் செய்திகள்

அஜித் அப்படி பேசியதற்கு காரணம் என்ன என்பது குறித்து பலரும் பேசி இருக்கும் நிலையில், பின்னணி காரணம் ஒன்றை பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது,  “பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி அஜித் பேசியது குறித்து பலரும் பேசி இருக்கிறார்கள். ஆனால் அன்றைக்கு அஜித் அப்படி நடந்து கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர் வீட்டில் இருந்து வரும்பொழுது  என்ன பேச வேண்டும் என்பதை எழுதி பையில் வைத்துக்கொண்டுதான் வந்தார். 

அவர் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்தபோது, அவருக்கு கலைஞர் உட்கார்ந்த இடத்திலிருந்து நான்காவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஷாலினிக்கு இருக்கையே இல்லை. இதைப் பார்த்து அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

வெளியே சென்று விடலாமா என்று யோசித்தால், அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிவிடும். இந்த நிலையில் தான் கலைஞருடைய மனைவியான தயாளு அம்மாள், ஷாலினியை தன் பக்கத்தில் அமர்ந்து கொள் என்று சொல்லி, அவர் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார். 

அஜித்தை பொருத்தவரை எங்கு சென்றாலும் அவர் ஷாலினியோடு இருக்க வேண்டும் என்று விரும்புவார். இந்த நிலையில் ஷாலினி ஒரு பக்கமும், அஜித் ஒரு பக்கமும் அமர்ந்தது. அவருக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி விட்டது. 

கூடவே, அவரை கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியதும் அவர் மனதிற்குள் இருந்தது. இவை இரண்டும் சேர்ந்து, அவருக்கு மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த கொந்தளிப்பு தான் அன்று அவர் அப்படி பேசியதற்கான காரணம்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.