முத்தக்காட்சியில் நடித்ததிற்கு நோட்டீஸ்; ‘இவ்வளவு சீரியஸா எடுத்துப்பாங்கன்னு நினைக்கல’ -ஐஸ்வர்யாராய் த்ரோபேக் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  முத்தக்காட்சியில் நடித்ததிற்கு நோட்டீஸ்; ‘இவ்வளவு சீரியஸா எடுத்துப்பாங்கன்னு நினைக்கல’ -ஐஸ்வர்யாராய் த்ரோபேக் பேட்டி!

முத்தக்காட்சியில் நடித்ததிற்கு நோட்டீஸ்; ‘இவ்வளவு சீரியஸா எடுத்துப்பாங்கன்னு நினைக்கல’ -ஐஸ்வர்யாராய் த்ரோபேக் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 28, 2025 10:51 AM IST

ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்த தூம் 2 சூப்பர் ஹிட்டானது. ஆனால், படத்தில் ஒரு காட்சிக்காக ஐஸ்வர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்தக் காட்சி என்னவென்று பாருங்கள்.

முத்தக்காட்சியில் நடித்ததிற்கு நோட்டீஸ்; ‘இவ்வளவு சீரியஸா எடுத்துப்பாங்கன்னு நினைக்கல’  -ஐஸ்வர்யாராய் த்ரோபேக் பேட்டி!
முத்தக்காட்சியில் நடித்ததிற்கு நோட்டீஸ்; ‘இவ்வளவு சீரியஸா எடுத்துப்பாங்கன்னு நினைக்கல’ -ஐஸ்வர்யாராய் த்ரோபேக் பேட்டி!

ஒரு காலக்கட்டத்தில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த ஐஸ்வர்யாராய் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இவர் 2012 ம் ஆண்டில் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் அவர் முத்தக்காட்சியில் நடித்ததிற்காக தனக்கு வக்கீல் நோட்டீஸ் வந்த கதையை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, ‘ கதாநாயகனுடனான நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சிகள் உள்ளிட்டவற்றில் இருந்து நான் விலகியே இருந்தேன். அதன் காரணமாகவே நிறைய திரைப்படங்களை நான் நிராகரித்தேன்.

முத்தக் காட்சிக்கு நோட்டீஸ்

ஒரு கட்டத்தில் இதெல்லாம் படங்களில் சகஜமாக வர ஆரம்பிக்கும் போது, அது போன்ற காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அப்படித்தான் தூம் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் அந்த முத்தக்காட்சியில் நடித்தேன். ஆனால், அதற்கு எனக்கு 2 வக்கீல் நோட்டீஸ் வந்தது. அதில் "நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒருவர்.

எங்கள் மகள்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம். மற்றவர்கள் பின்பற்றும் வழியிலேயே நீங்கள் நடந்திருக்கிறீர்கள். இந்த காட்சியை திரையில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன். திரையில் 3 மணி நேரம் வரும் ஒரு கதாபாத்திரத்தை மக்கள் எவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்வார்களா என்று நினைத்தேன்.

தூம் 2 பற்றி

தூம் 2 திரைப்படத்தில் ஐஸ்வர்யா மற்றும் ஹிருத்திக்கின் கெமிஸ்ட்ரி அப்போதே பலவாறு பேசப்பட்டது. விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதிய இப்படத்தை சஞ்சய் காத்வி இயக்கி இருந்தார். இதில் அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா மற்றும் பிபாஷா பாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ஐஸ்வர்யா ராய் கடைசியாக பொன்னியின் செல்வன் பார்ட் 2 படத்தில் திரையில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ரவிமோகன், கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், சரத்குமார், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் விவாகரத்து பெறப்போவதாக தகவல் வெளியான நிலையில், அண்மையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் 18-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடும் புதிய புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த பதிவில், ஐஸ்வர்யா ராய்- அபிஷோக் பச்சன் தம்பதியின் மகள் ஆராத்யா பச்சனும் இடம் பெற்று இருந்தனர்.

இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு மகள் பிறந்தாள். அவளுக்கு ஆராத்யா என பெயரிட்டனர்.