Anant Ambani wedding: சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் தல தோனி வரை! அம்மானி கல்யாணத்திற்கு செல்லம் பிரபலங்கள் பட்டியல் இதோ!
”குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிகள் பாரம்பரிய மற்றும் பிரமாண்டமான முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் விரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிகள் பாரம்பரிய மற்றும் பிரமாண்டமான முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவுக்கு அழைக்கப்பட்ட திரை பிரபலங்கள்
அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் மற்றும் கஜோல் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், கரண் ஜோஹர் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் ஆகியோர் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக குஜராத் செல்ல உள்ளனர்.
இவர்களைத் தவிர, வருண் தவான், சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர், சங்கி பாண்டே, போனி கபூர், அனில் கபூர், மாதுரி தீட்சித், ஆதித்யா சோப்ரா மற்றும் கரிஷ்மா கபூர் ஆகியோரும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள்.
ஏபிபி லைவ் செய்தியின்படி, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன், ட்விங்கிள் கன்னா மற்றும் ராணி முகர்ஜி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
இந்த திருமண நிகழ்வில் பாடகர்கள் ரிஹானா, அரிஜித் சிங், தில்ஜித் தோசன்ஜ் ஆகியோரும் நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இவர்களுடன் சச்சின் டெண்டுல்கர், தோனி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் ஆகியோரும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர். ஆனந்த் மற்றும் ராதிகா ஆகியோர் ஜனவரி 2023 இல் மும்பையில் உள்ள குடும்ப இல்லமான ஆன்டிலியாவில் ஒரு பாரம்பரிய விழாவில் நிச்சயதார்த்தம் செய்தது நினைவு கூறத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு குஜராத்தின் கட்ச் மற்றும் லால்பூரைச் சேர்ந்த பெண் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய ஸ்கார்ஃப்கள் பரிசாக வழங்கப்படும்.