Aishwarya Rajinikanth: ‘ஓம் நமச்சிவாய’.. மார்ச் மாதம் இப்படிதான்போச்சு! - ஐஸ்வர்யா ரஜினி!-aishwarya rajinikanth share march memories in her instagram handle viral on social media - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Rajinikanth: ‘ஓம் நமச்சிவாய’.. மார்ச் மாதம் இப்படிதான்போச்சு! - ஐஸ்வர்யா ரஜினி!

Aishwarya Rajinikanth: ‘ஓம் நமச்சிவாய’.. மார்ச் மாதம் இப்படிதான்போச்சு! - ஐஸ்வர்யா ரஜினி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 01, 2024 03:13 PM IST

என்னை பொறுத்தவரை நான் படத்தை முதல் பாதி வேறாகவும் இரண்டாம் பாதி வேறாகவும் பார்க்கவில்லை. ஒரே படமாக பார்த்தேன்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

அதன் பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் இயக்கும் வேலைகளில் மும்மரமாக இறங்கினார். அண்மையில், இவரது இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்தப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இந்தப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தன்னுடைய அப்பா, மகன்கள், வேலை நிமித்தமான போட்டோக்கள், வொர்க் அவுட் சார்ந்த வீடியோக்களை பகிர்வது வழக்கமான ஒன்று. 

இந்த நிலையில் அவர் தற்போது சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஓம் நமச்சிவாய மந்திரம் எழுதிய பேப்பர், காசி சென்றது தொடர்பான புகைப்படம், வொர்க் அவுட் செய்த புகைப்படம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து இது மார்ச் மாத நினைவுகள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக, லால் சலாம் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிலடி கொடுத்திருந்தார்.

இது குறித்து அண்மையில் சினிமா விகடன் சேனலுக்கு பேசிய அவர், “ லால் சலாம் படத்தைப் பொறுத்தவரை அந்த கதையில் திருப்புமுனைகளோ அல்லது புதிய விஷயங்களோ கிடையாது.

இதனால் நாங்கள் திரைக்கதையை லீனியராக (நேர்கோட்டில் கதை சொல்வது) கொண்டு செல்ல வேண்டுமா அல்லது நான் லீனியராக ( காட்சியை ஆரம்பித்து, அந்தக்காட்சியை பின்னால் முடிப்பது) கொண்டு செல்ல வேண்டுமா என்பது குறித்து விவாதம் செய்தோம். அப்போது படத்தை நான் லீனியராக கொண்டு செல்லலாம் என்ற முடிவை எடுத்தோம். படத்திலும் அதை நடைமுறைப்படுத்தினோம்.

என்னை பொறுத்தவரை நான் படத்தை முதல் பாதி வேறாகவும் இரண்டாம் பாதி வேறாகவும் பார்க்கவில்லை. ஒரே படமாக பார்த்தேன்.

இரண்டாம் பாதியில், முதல் பாதியில் காண்பிக்கப்பட்ட காட்சிகளுக்கான காரணங்கள் உடைபடும். அவை ஒவ்வொன்றாக உடையும் போது, முதல் பாதியில் இதை சொல்வதற்காகத்தான் அந்த காட்சி வைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

ஆனால் படம் பார்த்தவர்கள் முதல் பாதி புரியவே இல்லை என்றும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை ஒழுங்காக சொல்லவில்லை என்றும் சொன்னார்கள். மேலும் நாங்கள் எந்த கதாபாத்திரத்தை ஃபாலோ செய்து கதையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டார்கள்.

ஆனால் நான் அதனை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் அங்கு அப்படி நடக்கவில்லை. படம் குறித்து எனக்கு நிறைய விமர்சனங்கள் வந்தன. அதேபோல பாசிட்டிவான கருத்துக்களும் வந்தன. எப்படி நான் பாசிட்டிவான கருத்துக்களை சந்தோஷமாக எடுத்துக் கொள்கிறேனோ? அதேபோல நெகட்டிவான விமர்சனங்களையும் எடுத்துக்கொள்கிறேன்.

படத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் நேரம். இன்றைய ரசிகர்களுக்கு படத்தை இரண்டு மணி நேரம் 21 நிமிடங்களுக்குள் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்திருந்தால், படத்தை 2 மணி நேரம் 40 நிமிடங்களாக வைத்திருப்பேன். ஒரு இயக்குநராக அது எனக்கு ஏமாற்றம்தான். ” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.