தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Aishwarya Rajinikanth Says Her Father Rajinikanth Is Not Sangi At Lal Salaam Audio Launch

LalSalaam Audio Launch: ‘என் அப்பா சங்கி கிடையாது..’ ரஜினி மகள் ஐஸ்வர்யா ஓப்பன் டாக்!

Marimuthu M HT Tamil
Jan 26, 2024 11:19 PM IST

தனது தந்தை சங்கி கிடையாது என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LalSalaam Audio Launch: ‘தனது தந்தை ரஜினிகாந்த் சங்கி கிடையாது’ - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
LalSalaam Audio Launch: ‘தனது தந்தை ரஜினிகாந்த் சங்கி கிடையாது’ - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத்தோற்றத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த திரைப்படம், ‘லால் சலாம்’. அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது விழா மேடையில் பேசிய லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், '' அப்பாவை சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்கமாட்டார். அவர் மனிதநேயவாதி. 

இந்தப் படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்கமாட்டார்கள், அவரைத் தவிர.

நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ரஜினி ரசிகனாக இந்தப் படம் உங்களை பெருமைப்பட வைக்கும்’எனப் பேசியுள்ளார்.

அதேபோல் விழா மேடையில் பேசிய நடிகர் விக்ராந்த், ‘ரஜினி சார் சினிமாவில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்ல.. மனிதனாக மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்’எனப் பேசியுள்ளார்.

லால் சலாம் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு பங்கேற்பாளராக கலந்துகொண்ட கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது, ''ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று நாங்கள் எல்லாம் விரும்பினோம். அதனால் தான் படத்தில் அரசியல் தொடர்பான வசனம் வைத்தோம்''என வெகுநாட்களுக்குப் பின் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரை சங்கி என நெட்டிசன்கள் வறுத்து எடுத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தான் அயோத்தி சென்றது முழுக்க முழுக்க ஆன்மிகம் சார்ந்தது எனவும்; அதில் அரசியல் இல்லை எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தான் தனது தந்தை சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். மேலும், அவர் தனது தந்தையை இயக்கிய ‘லால் சலாம்’படத்தின் அவரது கதாபாத்திரத்தின் பெயர் மொய்தீன் பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.