Aishwarya rajinikanth: கடந்து போன 2 வருடங்கள்…‘தனியா இருக்குறதுதான் பாதுகாப்பு’ - ஐஸ்வர்யா ஓப்பன் டாக்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Rajinikanth: கடந்து போன 2 வருடங்கள்…‘தனியா இருக்குறதுதான் பாதுகாப்பு’ - ஐஸ்வர்யா ஓப்பன் டாக்!

Aishwarya rajinikanth: கடந்து போன 2 வருடங்கள்…‘தனியா இருக்குறதுதான் பாதுகாப்பு’ - ஐஸ்வர்யா ஓப்பன் டாக்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 11, 2024 06:37 AM IST

நிறைய பேர் என்னிடம் போர் அடித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பார்கள். ஆனால் பாருங்கள்.. எனக்கு போர் என்றால் என்னவென்றே தெரியாது. அந்த ஃபீலிங்கை நான் உணர்ந்ததே கிடையாது.

Aishwarya rajinikanth
Aishwarya rajinikanth

கிட்டதட்ட 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2022ம் ஆண்டு பிரியபோவதாக தத்தமது சோசியல் மீடியா பக்கங்களில் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து பலரும் பல விதமாக பேசினாலும், அதனை கண்டு கொள்ளாத தனுஷூம், ஐஸ்வர்யாவும் தங்களது தொழிலில் கவனம் செலுத்தினர். அந்த வகையில் ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கும் வேலைகளில் மும்மரமானார். 

இந்தப்படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரெட் நூல் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். 

அந்த பேட்டியில் கடந்த 2 வருடங்கள் எப்படியான மனநிலையில் வாழ்க்கை சென்றது என்பது குறித்து பேசினார். 

அவர் பேசும் போது, “கடந்த இரண்டு வருடங்களாக என்னை மிகவும் ஆட் கொண்டிருப்பது என்னுடைய தனிமைதான். என்னுடைய தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். உண்மையில் இந்த இரண்டு வருடங்களில் நான் உணர்ந்தது என்னவென்றால், தனியாக இருப்பவர்தான் உண்மையில் மிகவும் பாதுகாப்பான மனிதர். 

நிறைய பேர் என்னிடம் போர் அடித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பார்கள். ஆனால் பாருங்கள்.. எனக்கு போர் என்றால் என்னவென்றே தெரியாது. அந்த ஃபீலிங்கை நான் உணர்ந்ததே கிடையாது. எனக்கு தனியாக இருப்பது மிகவும் சௌகரியமான ஒன்றாக இருக்கிறது. 

வை ராஜா வை திரைப்படத்திற்கு பிறகு நான் பிரேக் எடுத்துக் கொண்டது என்னுடைய குழந்தைகளுக்காகத்தான். உலகம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. 

ஒருவர் தனியாக வாழ்க்கையை பார்த்துக்கொள்ளும் சூழ்நிலையானது மிகவும் எளிதாக தற்போது கிடைக்கிறது. என்னுடைய குழந்தைகள் வளரும் காலத்தை நான் மிஸ் செய்யக்கூடாது என்று யோசித்தேன். அதற்காகத்தான் அந்த பிரேக்கை எடுத்துக்கொண்டேன்” என்று பேசினார். 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.