Aishwarya Rajesh: 'என்ன தான் ஹிட் கொடுத்தாலும் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை'.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்
Aishwarya Rajesh: சங்கராந்தி வஸ்துனானு படம் வெற்றி பெற்றாலும் தெலுங்கில் தனக்கு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Aishwarya Rajesh: ஐஸ்வர்யா ராஜேஷ் சங்கராந்தி வஸ்துனானு படத்தின் மூலம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ராம் சரணின் கேம் சேஞ்சர் மற்றும் பாலகிருஷ்ணா தாகு மகாராஜ் ஆகிய படங்களுடன் போட்டியிட்ட இப்படம் பொங்கல் விழா வெற்றியாளராக மாறியது.
முதல் வெற்றி
ஐஸ்வர்யா ராஜேஷ் சங்கராந்தி வஸ்துனானு படத்திற்கு முன்பு தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி, ரிபப்ளிக் மற்றும் வேறு சில படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவை எதுவும் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. சங்கராந்தி வஸ்துனானு திரைப்படத்தின் மூலம் தான் அவருக்கு முதல் வெற்றி கிடைத்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் வெங்கடேஷின் மனைவியாக நடித்து மக்களைக் கவர்ந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. வெங்கடேஷுடன் அவர் படத்தில் போட்டி போட்டு நடித்ததாக கூறப்படுகிறது.
