தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Rajesh: சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்! படக்குழுவினருக்கு சுட சுட பிரியாணி விருந்து

Aishwarya Rajesh: சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்! படக்குழுவினருக்கு சுட சுட பிரியாணி விருந்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 27, 2024 09:45 PM IST

அமரன் படக்குழுவினருக்கு கடைசி நாளில் பிரியாணி விருந்து வைத்தார் சிவகார்த்திகேயன். அவரை ஃபாலோ செய்து ஐஸ்வர்யா ராஜேஷ் வளையம் படத்தின் பணியாற்றிவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளார்.

படக்குழுவினருக்கு சுட சுட பிரியாணி விருந்து
படக்குழுவினருக்கு சுட சுட பிரியாணி விருந்து

ட்ரெண்டிங் செய்திகள்

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் மனோ பாரதி என்பவர் இயக்குகிறார். படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக தேவ் நடிக்கிறார். கடந்த மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

நடிகர்கள் சேட்டன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரீஷ் பேராடி, சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பிரியாணி விருந்து

வளையம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் நிலையில், அந்த படத்தின் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

முன்னதாக, நடிகர் சிவகார்த்திகேயன் அமரா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்தார். சுயசரிதை போர் படமாக உருவாகி வரும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவரை ஃபாலோ செய்து ஐஸ்வர்யா ராஜேஷும் தனது படத்தின் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து வைத்துள்ளார்.

வளையம் படத்தின் கதை

தேர்வு எழுதுவதற்காக கிராமத்தில் இருந்து சென்னை வரும் ஐஸ்வராய் ராஜேஷ், அங்கு நடக்கும் குற்றம் ஒன்றின் சாட்சியாக இருக்கிறார். இதனால் அவர் சந்திக்கும் பின்விளைவுகள், போலீஸ் உதவியுடன் பிரச்னைகளில் இருந்து தப்பிப்பது தான் படத்தின் கதை.

இந்த படம் குறித்து இயக்குநர் மனோ பாரதி கூறியதாவது: "படத்தின் கதை ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றியே நகரும். இதில் அவர் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் 40 நாள்கள் நடைபெற்றது" என்று கூறினார்.

கைவசம் அரைடஜன் படங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த ஆண்டில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். கைவசம் அரைடஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். கருப்பர் நகரம், மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க மற்றும் ஹெர், அஜயண்டே ரண்டம் மோஷனம் ஆகிய மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர முதல் முறையாக உத்தரகாண்டா என்ற கன்னட படத்திலும் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டில் மலையாளத்தில் புலிமாடா, தமிழில் தீரா காதல், ஃபர்ஹானா, செப்பன சுந்தரி, ரன் பேபி ரன், தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய படங்கள் வெளியாகின. இவரது படங்கள் அனைத்து விமர்சிக ரீதியாக பாராட்டை பெற்றன. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டிலும் இவரது படங்கள் வரிசை கட்டி வர இருக்கிறது.

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்