Aishwarya rajesh: 'மொத்த கதையையும் தெரிஞ்சுக்கோங்க' இயக்குநருக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்?
ஒருவர் மீது தவறான குற்றச்சாட்டை சொல்லுவதற்கு முன் மொத்த கதையையும் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறி உள்ளார். ஆனால் இதில் ஐஸ்வர்யா வீர பாண்டியன் பெயரை குறிப்பிட வில்லை. அவரது பெயரை குறிப்பிடாமலே மறைமுகமாக அவரது குற்றச்சாட்டிற்கு ஐஸ்வர்யா பதிலளித்து இருப்பது பலரின் கவனத்தை ஈரத்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீது இயக்குநர் வீர பாண்டியன் குற்றம்சாட்டி இருநத நிலையில், நிறைய பேர் ஒரு பக்க கதையை மட்டும் கேட்டு விட்டு பேசுகிறார்கள். நடந்த விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் ஒரு முடிவுக்கு வருவது வாழ்க்கை மற்றும் உறவை கெடுத்து விடும் என ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருப்பது பேசுபொருளாகி உள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஆரம்பித்த சில காலங்களில் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்து உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ரசிகர்களுக்கு எந்த நட்சத்திர அந்தஸ்தும் இல்லாமல் சாதாரணமானவர். காக்கா முட்டை, தர்மதுரை போன்ற படங்களில் ஐஸ்வர்யாவின் எதார்த்தமான நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கிராமத்து பெண் இமேஜ் மூலம் பிரபலமடைந்து வருகிறார்.
சொந்தக் குரலில் டப்பிங் பேசியதும் ஐஸ்வர்யாவுக்கு உதவியது. ஐஸ்வர்யா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி திரையுலகில் நுழைந்தார். ஐஸ்வர்யா இத்தனை வருட திரையுலக வாழ்வில் ஒருமுறை கூட தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கியதில்லை. ஆனால் சமீபத்தில் ஐஸ்வர்யாவுக்கு எதிராக இயக்குனர் வீர பாண்டியன் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.
